பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 91 ஆயிரத்தை நெருங்கியது

Updated : மே 17, 2020 | Added : மே 17, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
india, coronavirus_update, coronavirus death count, corona toll, coronavirus in india, corona in India, confirmed coronavirus cases in India,  இந்தியா, கொரோனா, கொரோனாவைரஸ், உயிரிழப்பு, சுகாதாரஅமைச்சகம்,

புதுடில்லி: இந்தியாவில் இன்று (மே 17) காலை 9.15 மணி நிலவரப்படி, கொரோனா பாதிப்பு 91 ஆயிரத்தை நெருங்கியது. 90,927 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,872 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் பரவியுள்ள கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது: இந்தியாவில் கொரோனா வைரசால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 90,927 ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை 2,752 லிருந்து 2872 ஆக அதிகரித்துள்ளது. பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 34,109 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் 30,706 பேர் பாதிக்கப்பட்டு, 7,088 பேர் குணமடைந்துள்ளனர், 1135 பேர் பலியாகியுள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


latest tamil news




மாநிலம் - பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை

மஹாராஷ்டிரா - 30,706
குஜராத் - 10,988
தமிழகம் - 10,585
டில்லி - 9,333
ராஜஸ்தான் - 4,960
ஆந்திரா - 2,355
தெலுங்கானா - 1,509
கர்நாடகா - 1,092
கேரளா - 587

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chakra - plano,யூ.எஸ்.ஏ
18-மே-202004:57:01 IST Report Abuse
chakra பாகிஸ்தானை விட இந்தியாவில் அதிகமானதற்கு காரணமே மோடியின் நிர்வாகத்திறன் தான்
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
17-மே-202021:52:32 IST Report Abuse
 ஜெய்ஹிந்த்புரம் மெடலு குத்திக்கிட்டவங்க என்ன பண்ண போறாங்க? ஊரடங்கு என்ற பெயரில் யோசிக்காமல் கொள்ளாமல் ஒரு கேலிக்கூத்து.. அது மே 31 வரை வெச்சா என்ன, இல்லை இன்னும் ஒரு வருஷம் வெச்சா என்ன. பழியை அடுத்தவன் தலையில் போட்டு தப்பிக்க திட்டம் போடும் தறுதலை கூட்டம் தலைமையில் நடப்பது எல்லாம் தலைகீழாக தான் விடியும்.
Rate this:
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
17-மே-202010:52:00 IST Report Abuse
Tamilan இந்தியாவும் ஏமாந்து விட்டது. ஒரு சில பட்டதாரிகள், அரசியல் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட அதிகார வர்க்கங்களின் உள்ளவர்களிடம், உலகிலேயே சர்வ வல்லமை படைத்தவர்களில் ஒன்றான சீனா ஏமாந்துவிட்டது. சீனாவிடம் மற்ற சர்வ வல்லமை படைத்தவர்கள் ஏமாந்து விட்டார்கள். அவர்களிடம் ஏமாந்து, அவர்களின் அதிகாரத்துக்கு, பண பலத்துக்கு பயந்தும் இந்தியா போன்ற நூற்றுக்கணக்கான உலக நாடுகள் ஏமாந்துவிட்டதால். எப்போதும் இல்லாத அளவுக்கு வளர்ந்துவிட்டதாக, வெளிப்படை தன்மை எப்போதும் இல்லாத அளவுக்கு உலகமே உயர்ந்துவிட்டதாக தம்பட்டம் அடித்துகொண்டர்வகள் உலகை வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவுக்கு அழிவுக்கு இட்டு சென்று விட்டார்கள் . இனியும் இவர்களின் தம்பட்டம், பிரச்சாரம் ஓய்ந்தபாடில்லை. அதுமட்டுமல்லாமல், எப்போதும் இல்லாத அளவுக்கு அழிவை நோக்கி இட்டுச்சென்றது இவர்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்றும் பிரச்சாரம் செய்துகொள்ளுகிறார்கள். அதையும் அனைவரையும் நம்ப வைத்து விட்டார்கள் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X