வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் சேதம்: அரசு ஊழியர்கள் அச்சம்

Added : மே 17, 2020
Share
Advertisement

கரூர்: பெயர்ந்த நிலையில் வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் உள்ளதால், அரசு ஊழியர்கள் அச்சத்துக்குள்ளாகியுள்ளனர்.
கரூர், காந்திகிராமம் மற்றும் தான்தோன்றி மலையில், தமிழ்நாடு வீட்டு வசதிவாரிய குடியிருப்புகள் உள்ளன. காந்திகிராமத்தில் உள்ள, 300க்கும் மேற்பட்ட வீடுகளில் அரசு அலுவலர்கள் வசிக்கின்றனர். இந்த குடியிருப்புகளில் போதுமான பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படாமல் இருப்பதால் மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளன. குடியிருக்க அச்சப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, அங்கு வசிப்பவர்கள் கூறியதாவது: குடியிருப்புகளில் உள்ள சுற்றுசுவர்கள் முற்றிலும் இடிந்து விழுந்துள்ளன. தண்ணீர் பிடிக்கும் இடம், வாகனம் நிறுத்தும் இடங்களில் போதுமான மின் விளக்குகள் இல்லை. மின் மீட்டர் பெட்டிகள் சேதமடைந்துள்ளன. மாடியில் உள்ள குடிநீர் தொட்டிகளில் மூடி உடைந்த நிலையில் காணப்படுகிறது. இதனால், தொட்டிகளின் மூலம் கொசுக்கள் எளிதில் உற்பத்தியாகின்றன. குழாய்கள், கேட் வால்வு உடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால், தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. பால்கனி சுவர்கள் இடிந்து விழுந்து கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு வீட்டின் மேல்புறம் உள்ள கான்கிரீட் சுவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக பெயர்ந்து விழுந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதுமட்டுமல்லாது பல மாதங்கள் காலியாக உள்ள வீட்டிற்கு, புதிதாக குடியேறுபவர்களிடம் இடைப்பட்ட காலத்திற்குரிய தண்ணீர் வரி வசூல் செய்யப்படுகிறது. இது குறித்து கேட்டால், வீட்டுவசதி வாரிய, நகராட்சி அதிகாரிகள் என மாறி, மாறி அலைய விடுகின்றனர். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X