பொது செய்தி

தமிழ்நாடு

ஒரே நாளில் டாஸ்மாக் விற்பனை ரூ.163 கோடி வருவாய்

Updated : மே 17, 2020 | Added : மே 17, 2020 | கருத்துகள் (37)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் நேற்று (மே 16) திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகள் மூலம் ரூ.163 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கடந்த மே 7ம் தேதி மதுக்கடைகள் திறக்கப்பட்டன. ஆனால், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து, மே 9ம் தேதி முதல் மதுக்கடைகள் மூடப்பட்டன. இந்நிலையில், தமிழக அரசு,
Tasmac, Tamilnadu, Madurai, liquor sales, Coronavirus, Corona, Covid-19, Curfew, Lockdown, டாஸ்மாக், தமிழகம், மதுபானம், வருவாய், கடைகள், திறப்பு,

சென்னை: தமிழகத்தில் நேற்று (மே 16) திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகள் மூலம் ரூ.163 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கடந்த மே 7ம் தேதி மதுக்கடைகள் திறக்கப்பட்டன. ஆனால், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து, மே 9ம் தேதி முதல் மதுக்கடைகள் மூடப்பட்டன. இந்நிலையில், தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது. அதன்படி, சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து, டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க அனுமதியளித்தது. அதன்படி, நேற்று (மே 16) முதல் தமிழகத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர்த்து மற்ற பகுதிகளில் கடைகள் திறக்கப்பட்டன.


latest tamil news



மது வாங்குவோருக்கு 7 நிறங்களில் டோக்கன் விநியோகிக்கப்பட்டு, அவர்களுக்கு மது விற்பனை செய்யப்பட்டது. தமிழகத்தில் நேற்று (மே 16) மட்டும் டாஸ்மாக் கடைகளில் ரூ.163 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ.44.7 கோடிக்கும், சேலம் மண்டலத்தில் ரூ.41.07 கோடிக்கும், திருச்சியில் ரூ.40.5 கோடிக்கும், கோவையில் ரூ.33.05 கோடிக்கும் மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
18-மே-202006:06:43 IST Report Abuse
 Muruga Vel வசூலை அதிகரிக்க மகளிர்களுக்கு தனியாக கடை திறக்கணும் …
Rate this:
Cancel
SIVA G india - chennai,இந்தியா
17-மே-202019:14:51 IST Report Abuse
SIVA G  india 500ரூ க்கு 50ரூ வார வட்டிக்கு, சம்பாத்தியம் இல்லா நேரத்தில் வாங்கி குடித்தால் 8 வது வாரதத்தில் 500ரூ ஆயிரமாக மாறிவிடும்.தின குடிகாரன் தினமும் 10 வார வட்டிக்கு வாங்கினால் 8வது வாரம் முதல் தினமும் ரூ.1000 கடனுக்கும், தினக்குடிக்கு ரூ.500 வேண்டும். எல்லா சொத்துகளையும் மனைவி மக்களையும் அடமானம் வைத்து விடுவார்கள்.கடன் கொடுப்பவர்கள் அரசியல்வாதிகளின் பினாமிகளும்,சில வங்கி அதிகாரிகளின் பினாமிகளும். குபேனே வட்டியில்ல கடன் கொடுத்தாலும், கஜனா காலியாகி அவனே யாரிடமாவது கடன் வாங்க வேண்டியதுதான். எந்த அரசாக இருந்தாலும் நேர்மையற்ற அரசியல்வாதிகள் இருக்கும்வரை நாட்டுக்கு நல்லது செய்ய முடியாது.
Rate this:
Cancel
N Srinivasan - Chennai,இந்தியா
17-மே-202017:39:59 IST Report Abuse
N Srinivasan மது விற்பனையை ஆன்லைனில் கொண்டு வரவேண்டும். ஆதார் கார்டு மூலமான சப்ளை வேண்டும். அந்த ஆதார் கார்டு எல்லாத்துக்கும் ரேஷன் பொருள் கொடுக்கக்கூடாது காஸ் மானியம் தரக்கூடாது அப்போது தான் நாடு திருந்தும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X