பொது செய்தி

இந்தியா

கல்வி வளர்ச்சிக்கு ஆன்லைன் டி.வி., ரேடியோ, : நவீன தொழில் நுட்பம் பயன்படுத்த முடிவு

Updated : மே 17, 2020 | Added : மே 17, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
புதுடில்லி: தன்னிறைவு இந்தியா திட்டத்தில் கடைசி கட்ட அறிவிப்புகளை வெளியிட்டு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:*கொரோனா தடுப்பு பணிகளுக்கு ரூ.4113 கோடி மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.*மருத்துவர்களுக்கு பாதுகாப்பு உடைகள் உள்நாட்டில்தயாரிக்கப்படுகின்றன.*நாடு முழுவதும் பரிசோதனை மையம் அமைகக 550 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.*சுகாதார பணியாளர்களுக்கு 87
நிதிஅமைச்சர் நிர்மலா, ஆன்லைன்கல்வி, சுகாதாரத்துறை, கல்வித்துறை, ஆன்லைன், மாநிலஅரசு, கடன், Finance Minister, Nirmala Sitharaman, Healthcare workers, Online education, economic package, stimulus package

புதுடில்லி: தன்னிறைவு இந்தியா திட்டத்தில் கடைசி கட்ட அறிவிப்புகளை வெளியிட்டு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:

*கொரோனா தடுப்பு பணிகளுக்கு ரூ.4113 கோடி மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

*மருத்துவர்களுக்கு பாதுகாப்பு உடைகள் உள்நாட்டில்தயாரிக்கப்படுகின்றன.

*நாடு முழுவதும் பரிசோதனை மையம் அமைகக 550 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

*சுகாதார பணியாளர்களுக்கு 87 லட்சம் என்95 மாஸ்க்குகள், 11 கோடி ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. 51 லட்சம் பிபிஇ கிட்ஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.

*கொரோனாவை கட்டுப்படுத்த மருத்துவ உபகரணங்கள் வாங்க ரூ.15 ஆயிரம் கோடி வழங்கப்பட்டுள்ளது.

*மருத்துவம், சுகாதார பணியாளர்களின் பாதுகாப்பிற்காக பேரிடர் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது

*உடல்கவசம் தயாரிக்க 3000 நிறுவனங்கள் நம்நாட்டில் செயல்படுகின்றன.

*சுகாதார திட்டத்திற்கான செலவினங்கள் அதிகரிக்கப்படும்.

*அனைத்து மாவட்டங்களிலும தொற்றுநோய் தொடர்பான ஆய்வகங்கள் அமைக்கப்படும்.

*அனைத்து மருத்துவமனைகளிலும் தொற்று நோய் பிரிவு அமைக்கப்படும்

*ஊரடங்கு காலத்தில் ஆன்லைன் கல்வி ஊக்குவிக்கப்படுகிறது

*பள்ளிகள் திறக்கப்பட முடியாத சூழலில் ஆன்லைன் கல்விக்கு அனைத்து விதமான உதவிகளும் செய்யப்படும்.

*இ பாடசாலை திட்டத்தில் மேலும் 200 பாடப்புத்தகங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.


latest tamil news
*ஆன்லைன் வழி கல்விக்காக 12 புதிய கல்வி சேனல்கள் உருவாக்கப்படும்.

*பள்ளிகளில் தொழில்நுட்பம் பயன்படுத்தி ஆன்லைன் மூலம் கல்வி கற்பிக்கப்பட்டு வருகின்றன

*கல்வி சார்ந்த வீடியோ ஒளிபரப்ப 2 தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம்

*கொரோனா பாதிப்பு குறைந்த உடன் தொழில்நுட்ப உதவியுடன் கல்வித்துறையை வலுப்படுத்த பிரதமர் இவித்யா திட்டம்

*இ வித்யா தீஷா திட்டத்தின் கீழ் ஒரே தேசம், ஒரே கல்வி திட்டம் செயல்படுத்தப்படும்

*டிஜிட்டல் மற்றும் ஆன்லைன் வழி கற்பித்தல் திட்டம்

*100க்கும் மேற்பட்ட பல்கலைகளில் ஆன்லைன் மூலம் கல்வி கற்கும் வசதி மே மாதத்திற்குள் ஏற்படுத்தப்படும்

*பார்வையற்ற மாற்று திறனாளிகளுக்கும் இணையவழி கல்வி திட்டம்

*மாற்றுதிறனாளி மாணவர்களுக்கு பிரத்யேக மின்னணு பாட வகைகள் அமைக்கப்படும்

*கல்விக்கு கம்யூனிட்டி ரேடியோ அதிகளவில்பயன்படுத்தப்படும்

*மனோதர்பன்திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு மன நல ஆலோசனை வழங்கப்படும்.

*தொடக்க கல்வியில் ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு புதிய திறன் மேம்பாடு வரைவு திட்டங்கள் வகுக்கப்படும்.

*திவால் சட்டத்தின் கீழ் 44 சதவீத கடன் திருப்பி வசூலிக்கப்பட்டுள்ளது.

*100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு மேலும் 40 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

*ஏற்கனவே 61,000 கோடி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் கூடுதல் நிதி ஒதுக்கப்படுகிறது

*இதன் மூலம் மொத்தம் 300 கோடி மனித வேலை நாட்கள் உருவாக்க வழிவகை செய்யப்படும்

*சுகாதார துறையில் பொது செலவின தொகை அதிகரிக்கப்படும்.

*சொந்த மாநிலங்களுக்கு செல்லும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இது உதவும்

*ஊரக நகர பகுதிகளில் சுகாதார நல மையங்கள் மேம்படுத்தப்படும்.

*எதிர்கால சுகாதார சவால்களை சந்திக்க இந்தியா சந்திக்க தயாராகிவருகிறது.

*தொழில் துவங்கும் முறைகள் மேலும் எளிமையாக்கப்படும்.

*திவால் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பது ஒராண்டுக்கு ஒத்திவைக்கப்படும். இதனால், சிறு குறு நிறுவனங்கள் பயன்பெறும்

*கம்பெனி சட்டத்தில் உள்ள சில கிரிமினல் குற்றப்பிரிவுகளை தளர்த்த நடவடிக்கை

*திவால் சட்டத்தின் கீழ் சிறு குறு தொழில் நடத்துவோருக்கு தனி தீர்ப்பாயம் அமைக்கப்படும்

*சிறு குறு தொழில் நடத்துவோர் பாதிக்கப்படாத வகையில் புதிய நடைமுறை அமல்படுத்தப்படும்

*கம்பெனிகள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர அவசர சட்டம் கொண்டு வரப்படும்.

*சிறு நிறுவனங்கள், தனிநபர் நிறுவனங்களின் வாராக்கடன்களுக்கு குறைந்தபட்ச அபராதம் வசூலிக்கப்படும்

*திவாலாகும் நிலையில் உள்ள நிறுவனங்களை மீட்பதற்கு புதிய வழிமுறைகள் வகுக்கப்படும்.

*வங்கி கடனை செலுத்த முடியாதவர்கள் நீதிமன்றத்தை அணுகி காலக்கெடுவை நீட்டித்து கொள்ளலாம்.

*சில பொதுத்துறை நிறுவனங்கள் தவிர்த்து மற்ற நிறுவனங்களில் தனியார் பங்களிப்பு அனுமதிக்கப்படும்

* தனியார் பங்களிப்பு இருந்தாலும் பொதுத்துறை நிறுவனங்களின் மீதான கட்டுப்பாடு தொடரும்

* அனைத்து துறைகளிலும் தனியார் நிறுவனங்கள் போட்டி போடலாம்.

* தனியார் முதலீட்டிற்கு அனுமதியில்லாத நிறுவனங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

*ஒரே துறையில் 4க்கும் மேற்பட்ட பொதுத்துறைநிறுவனங்கள் இருந்தால் ஒன்றிணைக்கப்படும்.

* கொரோனா காரணமாக மாநில அரசின் வருவாய் குறைந்துள்ளது. பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட ரூ.46,038 கோடி மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது.

* இக்கட்டான சூழ்நிலையில், மாநில அரசுகளுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்து வருகிறது.

*வருவாய் பற்றாக்குறை மானியத்தை குறித்த காலத்தில் மாநிலங்களுக்கு வழங்கி வருகிறோம்.

* வருவாய் பற்றாக்குறை நிதியாக மாநில அரசுகளுக்கு ரூ.12,390 கோடி வழங்கப்பட்டுள்ளது.

*பேரிடர் மீட்பு நிதியில் ரூ.11,092 கோடி மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

*தன்னிறைவு இந்தியா திட்டத்தை செயல்படுத்த ஒத்திசைவான திட்டங்கள் தேவைப்படுகின்றன.

*மாநில அரசுகளின் கடன் வாங்கும் வரம்பு 3 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக அதிகரிப்பு.

* மாநில அரசுகள் தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட வரம்பில் 14 சதவீதத்தை மட்டுமே பயன்படுத்தியுள்ளனர். 86 சதவீதத்தை பயன்படுத்தவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S BASKAR - coimbatore,இந்தியா
17-மே-202017:35:32 IST Report Abuse
S BASKAR 1 - 12 வரை 12 சேனல் .சரி தமிழ் நாட்டில் சமசீர் கல்வி , cbsc பாடத்திட்டம் , பிற மாநிலக் கல்வி திட்டம் - இதில் எந்த பாடத்திட்டத்தில் சேனலில் பாடம் நடத்துவீர்கள்
Rate this:
Cancel
Raghunathan Nagarajan Ragu Naga - Atlanta,யூ.எஸ்.ஏ
17-மே-202017:30:24 IST Report Abuse
Raghunathan Nagarajan Ragu Naga திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு, தங்களின் தொலைநோக்கு திட்டங்கள் நல்ல வரவேற்கத்தக்கதாக உள்ளன. அவற்றை அமுல் படுத்த நல்ல அதிகாரிகளை நியமிக்க வேண்டும். முக்கியமாக கல்வித்துறையில் "e siksha deeksha " என்ற ஒரே தேசம் ஒரே கல்விமுறை கட்டாயமாக அமல்படுத்தப்பட வேண்டும். தமிழகத்தில் நாங்கள் கண்கூடாக பார்க்கிறோம். அரசியல் வாதிகளின் பின்புலத்தோடு, பல பெரும் பண முதலைகள் கல்விக்கூடங்களை வைத்துக்கொண்டு, மக்களை கசக்கி பிடிங்கி விடுகிறார்கள். இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இதற்கு ஆளும்கட்சி எதிர்க்கட்சி என்ற விதிவிலக்கல்ல. இருவரும் சேர்ந்து கூட்டு களவாணித்தனம் செய்கிறார்கள்.
Rate this:
Cancel
Chandrasekar - Muscat,ஓமன்
17-மே-202016:05:55 IST Report Abuse
Chandrasekar எல்லா மாணவர்களும் தற்போது பேஸ்புக் மற்றும் வாட்சப்பில் உள்ளதால் இதிலேயே ஆசிரியர்கள் பாடங்களை நடத்தலாம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X