பொது செய்தி

இந்தியா

12 மணி நேர வேலை உத்தரவை வாபஸ் பெற்ற உ.பி.,அரசு..!

Updated : மே 17, 2020 | Added : மே 17, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
லக்னோ : தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக நீட்டித்த உத்தரவு தொடர்பாக அலகாபாத் உயர்நீதிமன்றம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிய நிலையில், உ.பி., அரசு அதனை திரும்ப பெற்றுள்ளது.சமீபத்தில் உ.பி.,அரசு , தொழிலாளர்களின் பாதுகாப்பு தொடர்பான விதிகள், சரியான நேரத்தில் ஊதியம், குறைந்தபட்ச ஊதியம் உள்ளிட்ட 4 விதிகள் தவிர்த்து அனைத்து தொழிலாளர்கள்
12 மணி நேர வேலை, வாபஸ், உ.பி., அரசு, UP govt,  controversial order, 12-hour shifts, industrial workers, Allahabad High Court, Lucknow

லக்னோ : தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக நீட்டித்த உத்தரவு தொடர்பாக அலகாபாத் உயர்நீதிமன்றம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிய நிலையில், உ.பி., அரசு அதனை திரும்ப பெற்றுள்ளது.

சமீபத்தில் உ.பி.,அரசு , தொழிலாளர்களின் பாதுகாப்பு தொடர்பான விதிகள், சரியான நேரத்தில் ஊதியம், குறைந்தபட்ச ஊதியம் உள்ளிட்ட 4 விதிகள் தவிர்த்து அனைத்து தொழிலாளர்கள் சட்டங்களில் இருந்து மாநிலத்திற்கு விலக்கு அளிப்பதாக அறிவித்திருந்தது. கடந்த மே 8ம் தேதி தலைமை செயலர் வெளியிட்ட அறிவிக்கையில், தொழிற்சாலைகளில் ஒருநாளைக்கு தொழிலாளர்களை 8 மணி நேரத்திற்கு பதிலாக 12 மணி நேரம் வரை பணியாற்ற அனுமதி அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.


latest tamil newsதொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரம் அதிகரித்தத்தை எதிர்த்து உ.பி.தொழிலாளர்கள் முன்னணி சார்பில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த தலைமை நீதிபதி கோவிந்த் மாத்தூர் மற்றும் சித்தார்த் வர்மா அடங்கிய் அமர்வு, மாநில அரசு விளக்கமளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கை மே 18ம் தேதிக்கு ஒத்திவைத்தது. உ.பி.,யில் முக்கிய தொழிலாளர் சட்டங்கள் 3 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது தொடர்கிறது. ஆனால் மே 15ம் தேதியிட்ட உத்தரவில், தொழிற்சாலைகளில் வேலை நேரத்தை அதிகரிப்பதற்கான உத்தரவு மட்டும் தனி ஆணை மூலம் வாபஸ் பெறப்படுவதாக உ.பி.,அரசு தெரிவித்துள்ளது.

பாரதீய மஸ்தூர் சங்கம் (பி.எம்.எஸ்) சார்பில் உ.பி.,ம.பி., மற்றும் குஜராத் மாநிலங்களில் தொழிலாளர்கள் நல சட்டங்களை திருத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 20ம் தேதி நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா
18-மே-202022:16:47 IST Report Abuse
தாமரை செல்வன்-பழநி இது பாஜக வுக்கு தொழிலாளர்கள் மத்தியில் கேட்ட பெயரை உண்டாக்கும் . பொதுவாகவே பாஜகவை முதலாளிகளுக்கு ஆதரவான கட்சி என்று ஒரு பெயருண்டு. இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தால் பாஜக இந்தியத் தொழிலார்களின் கடும் வெறுப்பை சம்பாதிக்க வேண்டும். அதன் பாதிப்பு வரும் காலங்களில் பாஜக உணரும். ஏனெனில் இன்றைய நிலையில் பாஜக ஆதரவு தொழில் சங்கமான பாரதிய மஸ்தூர் சங்கம்தான் இந்தியாவின் பெரிய தொழில் சங்கம். அதன் ஆதரவை பாஜக இழக்கும். அல்லது தொழிலாளர்கள் BMS ஐ விட்டு விலக வேண்டி வரும்.
Rate this:
Cancel
sundarsvpr - chennai,இந்தியா
17-மே-202015:57:06 IST Report Abuse
sundarsvpr முதலாளி தொழிலாளி வர்க்க போராட்டம். இதில் சுமுகமான நிலை காணாவிடில் பொருளாதார பாதிப்பு. சட்ட ஒழுங்கு தீர்ப்பது அரசு கடைமை. ஆனால் வீட்டில் நடக்கும் போராட்டத்தில் அரசு தலையிட முடியுமா? சிறுவர் சிறுமியர் அதி காலையில் எழுந்து பரக்க பரக்க காலை கடன்களை முடித்து சாப்பிட்டும் சாப்பிடாமல் பள்ளிக்கு ஓடுவதும் எவ்வித உடல் பயிற்சி இல்லாமல் இரவு வெகு நேரம் கண்முழித்து படிப்பது. இது சரியா யாருக்கு பாதிப்பு எவ்வளவு பாதிப்பு இதனை சரியான நடைமுறைக்கு கொண்டு வர அரசுக்கு பொறுப்பு கிடையாதா? ஆனால் பல ஆண்டுகள் கடந்து வேலைக்கு வந்தால் தொழில் சட்டம். நியாயமா? இந்த தூக்கமின்மைதான் கல்லுரி வாழ்க்கையில் தடுமாற்றம். தாங்கள் சிறு வயதில் நேரத்தில் எழுந்து நேரத்தில் தூங்கியது அது இப்போது உங்களுக்கு மகிழ்வா தெரியவில்லையா என்று பெற்றோர்கள் சிந்திக்கவேண்டும். மம்மி டாடி கூப்பிட்டால் தான் சந்தோசமா?
Rate this:
Cancel
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
17-மே-202015:05:29 IST Report Abuse
Loganathan Kuttuva Workers attending breakdown callls will do the work till it completes.It takes more than ten hours in many places.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X