பொது செய்தி

இந்தியா

'பாலியல் விடுதிகளை மூடுவதால் 72 % கொரோனா பாதிப்பை தவிர்க்கலாம்'

Updated : மே 17, 2020 | Added : மே 17, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement
புதுடில்லி: இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு மருந்து கண்டறியும் வரை, சிவப்பு விளக்கு பகுதிகள் மூடப்பட்டால், 72 சதவீத கொரோனா தொற்று பாதிப்பை தவிர்க்கலாமென புதிய ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவின் யேல் மருத்துவ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில், ஊரடங்கை தளர்த்திய பின்னரும், பாலியல் தொழில் விடுதிகளை மூடுவதால், இந்தியாவில் கொரோனா
பாலியல் விடுதி, கொரோனா, கொரோனாவைரஸ், கோவிட்19, பரவல், india, coronavirus, corona, covid-19, corona outbreak, corona updates, corona news, corona cases, corona in india, red zones, india fights corona, corona spread, community spread, Yale School of Medicine, YSM, Harvard Medical School,  red-light areas, Covid-19 Transmission in India

புதுடில்லி: இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு மருந்து கண்டறியும் வரை, சிவப்பு விளக்கு பகுதிகள் மூடப்பட்டால், 72 சதவீத கொரோனா தொற்று பாதிப்பை தவிர்க்கலாமென புதிய ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் யேல் மருத்துவ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில், ஊரடங்கை தளர்த்திய பின்னரும், பாலியல் தொழில் விடுதிகளை மூடுவதால், இந்தியாவில் கொரோனா தொற்றால் எதிர்ப்பார்க்கப்படும் 63 சதவீத இறப்புகளின் எண்ணிக்கை குறைய கூடும். ஊரடங்கிற்கு பின் கொரோனா தடுப்பூசி கண்டறியும் வரை விடுதிகள் மூடப்பட்டிருந்தால், இந்தியர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் அபாயம் குறைவாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.மேலும் ஆய்வு முடிவுகளை மத்திய மற்றும் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுடன் பகிர்ந்துள்ளதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர். நாடு முழுவதும் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும், பாலியல் தொழில் விடுதிகளை தொடர்ந்து மூடியிருக்க வேண்டுமென ஆய்வாளர்கள் பரிந்துரை செய்துள்ளனர். இதனால் 45 நாட்களில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் 72 சதவீதம் குறையும் மற்றும் கொரோனா உச்சக்கட்டத்தை அடைய 17 நாட்கள் வரை தாமதம் ஆகும். இந்த தாமதம் அரசுக்கு மக்களின் ஆரோக்கியம் மற்றும் பொருளாதாரத்தை காக்க கூடுதல் அவகாசம் அளிக்குமெனவும் கூறியுள்ளனர். ஊரடங்கிற்கு பின் முதல் 60 நாட்களில் விடுதிகள் மூடப்பட்டிருந்தால், கொரோனா உயிரிழப்பு 63 சதவீதம் அளவுக்கு குறையுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil newsதேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு கழகத்தின் புள்ளிவிவரப்படி, இந்தியாவில் சுமார் 6,37,500 பாலியல் தொழிலாளர்கள் மற்றும் நாளொன்றுக்கு 5 லட்சம் வாடிக்கையாளர்கள் சிவப்பு விளக்கு பகுதிகளுக்கு சென்று வருவதாக கூறப்படுகிறது. ஊரடங்கு தளர்வுக்கு பின் ஒருவேளை பாலியல் தொழில் விடுதிகள் செயல்பட துவங்கினால், கொரோனா மிக வேகமாக பரவுவதோடு, அதிக அளவில் பாலியல் தொழிலாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவரென கூறப்பட்டுள்ளது. அங்கு சமூக இடைவெளி என்பது சாத்தியமில்லை என்பதால் அதிக பரவலுக்கு வாய்ப்புள்ளது. பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் மூலம் லட்சக்கணக்கான மற்ற குடிமகன்களுக்கு வைரஸ் பரவுமெனவும், பாலியல் தொழில் விடுதிகள் கொரோனா ஹாட்ஸ் ஸ்பாட் ஆக மாறக்கூடுமென ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்தியா முழுவதும் மும்பை, டில்லி, புனே, நாக்பூர், கோல்கட்டா ஆகிய 5 நகரங்களில் பாலியல் தொழில் விடுதிகளை மூடுவதால் கொரோனா உச்சத்தை அடைவதில் ஏற்படுத்தும் தாக்கத்தை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். இதன்படி, மும்பையில் 12 நாட்களும், டில்லியில் 17 நாட்களும், புனேவில் 29 நாட்களும், நாக்பூரில் 30 மற்றும் கோல்கட்டாவில் 36 நாட்களும் தாமதத்தை ஏற்படுத்துமென குறிப்பிட்டுள்ளனர். 45 நாட்களில், மும்பையில் 5 ல் ஒரு மடங்காவும், புனேவில் 27 %, டில்லியில் 31 %, நாக்பூரில் 56 %, கோல்கட்டாவில் 66 % என்ற அளவில் கொரோனா தொற்று பாதிப்பு குறையுமெனவும், முதல் 60 நாட்களில் இறப்பு விகிதம் மும்பையில் 28 %, டில்லியில் 38 %, புனேவில் 43 %, கோல்கட்டா மற்றும் நாக்பூரில் 60 % குறைக்குமெனவும் தெரிவித்துள்ளனர்.

கொரோனா காரணமாக ஜெர்மனி, நெதர்லாந்து நாடுகளில் மக்களை காக்க சிவப்பு விளக்கு பகுதிகள் மூடப்பட்டது. ஆனால் ஜப்பானில் சரியான நேரத்தில் சிவப்பு விளக்கு பகுதி மூடப்படாததால், உள்ளூர் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்ததாகவும் ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Bangalore,இந்தியா
17-மே-202021:14:47 IST Report Abuse
Ramesh Sargam "அமெரிக்காவின் யேல் மருத்துவ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில், ஊரடங்கை தளர்த்திய பின்னரும், பாலியல் தொழில் விடுதிகளை மூடுவதால், இந்தியாவில் கொரோனா தொற்றால் எதிர்ப்பார்க்கப்படும் 63 சதவீத இறப்புகளின் எண்ணிக்கை குறைய கூடும். " இந்த அறிவுரையை யார் கேட்கப்போகிறார்கள். பாருங்க, இந்த மது கடைகள் திறப்பதற்கு முன்பு வைரஸின் தொற்று கட்டுப்பாட்டிற்குள் இருந்தது. மதுக்கடைகளை திறந்தார்கள், வைரஸ் அதிகம் பரவுகிறது. மது கடைகளை திறக்காதே என்று அறிவுறுத்தினால் அரசாங்கமே செவி சாய்க்கவில்லை.
Rate this:
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
17-மே-202021:01:02 IST Report Abuse
Rajagopal அப்பாவிப் பெண்களைக் கடத்தி சென்று, விடாமல் கற்பழித்து, அவர்களது மனதை சிதைத்து, சிறையாளிகளாக ஆக்கி, பாலியலில் ஈடுபடுத்தி அதை வைத்து பணம் செய்யும் அக்கிரமத்திற்கு கொரோனா வைரஸ் முற்றுப் புள்ளி வைத்து விட்டது. இனிமேல் சிவப்பு விளக்குப் பகுதிகளுக்கு செல்பவர்கள் வியாதியைப் பரப்பும் கருவிகளாக மாறி விடுவார்கள். பலர் அந்தக் கிருமியினாலேயே அழிவார்கள். இந்த வைரஸ் வந்ததால் ஏற்பட்ட நல்ல பயன்களில் இதுவும் ஒன்று. இப்போது விபச்சாரத் தொழிலில் புகுத்தப்பட்டு வாழ்வாதாரமில்லாத பெண்களுக்கு, அரசாங்கமும், மாதர் சங்கங்களும், அரசியல் இயக்கங்களும், ஏதாவது மாற்று தொழில் செய்ய வழி செய்து கொடுக்க முனைய வேண்டும்.
Rate this:
Cancel
17-மே-202019:38:33 IST Report Abuse
ஆப்பு ஆறு வருஷமா என்னென்னவோ செஞ்சுட்டோம்னு சொல்லிக்கிறவங்க இதுல ஒண்ணுமே செய்யலியே... எல்லாம் நேருவோட சதி...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X