பொது செய்தி

இந்தியா

20 லட்சம் கோடி: எந்ததெந்த துறைக்கு எவ்வளவு நிதி?

Updated : மே 17, 2020 | Added : மே 17, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
Relief Package, Nirmala Sitharaman, Economy, 20 Lakhs Crores, India, Finance Minister, FM, Nirmala, PM Modi, Narendra Modi, Atma Nirbhar Bharat, Special Economic Package, India self-reliant, coronavirus, corona, covid-19, corona outbreak, corona updates, indian economy, economy, recession, business

புதுடில்லி: கடந்த 12ம் தேதி டிவி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவை சமாளிக்க, 20 லட்சம் கோடி ரூபாயில் திட்டங்கள் அறிவிக்கப்படும் என தெரிவித்தார். அதன்படி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பல்வேறு கட்டங்களாக புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். மொத்தம் ரூ.20.97 லட்சம் கோடி மதிப்பிலான இந்த அறிப்புகளில் துறை வாரியாக ஒதுக்கப்பட்ட நிதிகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி, முதல் கட்ட அறிவிப்பில் ரூ.5,94,550 கோடி,
2ம் கட்ட அறிவிப்பில் ரூ.3,10,000 கோடி,
3ம் கட்ட அறிவிப்பில் ரூ.1,50,000 கோடி,
4 மற்றும் 5ம் கட்ட அறிவிப்பில் ரூ.48,100 கோடி மதிப்பிலான திட்டங்களை நிதியமைச்சர் நிர்மலா அறிவித்தார்.
மேலும், பிரதமர் முன்கூட்டி அறிவித்த திட்டங்களுக்கு ரூ.1,92,800 கோடியும்,
ரிசர்வ் வங்கி அறிவித்த திட்டங்களுக்கு ரூ.8,01,603 கோடியும் என மொத்தமாக ரூ.20,97,053 கோடிக்கான அறிவிப்புகள் இடம்பெற்றன.


latest tamil newsஅறிவிப்பு 1


தொழில்துறையை மையமாக கொண்ட முதல்கட்ட அறிவிப்பில் சிறு, குறு, நடுத்தர தொழில்துறை மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் முதல் ரியல் எஸ்டேட், மின் விநியோகம் உள்ளிட்ட துறைகள் சார்ந்த 16 அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டன. ஊரடங்கு காலத்தில் பாதிக்கப்பட்டுள்ள சிறுகுறு தொழில்களுக்கு உதவும் வகையில் பிணையில்லாமல் ரூ.3 லட்சம் கோடி கடன், நலிவடைந்த சிறுகுறு தொழில்களுக்கு ரூ.25 ஆயிரம் கோடி உள்ளிட்ட அறிவிப்புகளுடன் மொத்தம் ரூ.5,94,550 கோடி மதிப்பிலான அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டன.


latest tamil newsஅறிவிப்பு 2

ஊரடங்கால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு, வேலை வாய்ப்பு வழங்கும் வகையில், மத்திய நிதியமைச்சரின் இரண்டாம் கட்ட, பொருளாதார மீட்பு அறிவிப்புகள் அமைந்தன. சாலையோர வியாபாரிகள், விவசாயிகள், சிறு தொழில் புரிவோருக்கு, சம்பளம், கடன், சலுகைகள் கிடைக்கும் வகையிலும், அவர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். நபார்டு வங்கி மூலம் கூட்டுறவு மற்றும் கிராமப்புற வங்கிகளுக்கு ரூ.29,500 கோடி கடன், முத்ரா திட்டத்தில் வட்டி சலுகைக்காக ரூ.1,500 கோடி செலவு, வெளிமாநில தொழிலாளர்களுக்கு அடுத்த இரு மாதம் இலவசமாக 5 கிலோ அரிசி அல்லது கோதுமை வழங்குதற்காக ரூ.3,500 கோடி ஒதுக்கீடு உள்ளிட்ட மொத்தம் ரூ.3,10,000 கோடி மதிப்பிலான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.


latest tamil newsஅறிவிப்பு 3

மூன்றாவது அறிவிப்பில் விவசாயத்துறைக்கான 11 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. விவசாய உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் ஆரம்ப நிலைத் தொடர் நிலையங்கள் போன்றவற்றுக்கு சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் வழங்குதல், பிரதம மந்திரி மத்ஸயா சம்பட யோஜனா திட்டத்திற்கு ரூ.20 ஆயிரம் கோடி. உணவு சார்ந்த சிறுநிறுவனங்களுக்கு ரூ.10 ஆயிரம் கோடி, கால்நடை வளர்ப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி ரூ.15 ஆயிரம் கோடி, உள்ளிட்ட திட்டங்களுக்கு மொத்தம் ரூ.1,50,000 கோடி மதிப்பிலான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.


latest tamil newsஅறிவிப்பு 4 மற்றும் 5


நான்காம் அறிவிப்பில் எட்டு துறைகளுக்கான பெரும்பாலான நடவடிக்கைகள் பழைய சீர்திருத்த திட்டங்களுக்கு ஒரு புதிய உந்துதல் அல்லது முந்தைய முடிவுகளை ஒருங்கிணைத்தலை மையமாக கொண்டதாக இருந்தன. வணிக நிலக்கரி சுரங்கம், நிலக்கரி வாயுவாக்க திட்டங்கள்; விமான பராமரிப்பு, பழுது மற்றும் எம்.ஆர்.ஓ.,க்கான மையத்தை உருவாக்குதல்; விமான நிலையங்களை தனியார் மயமாக்குதல் மற்றும் இந்திய வான்வெளியை மேம்படுத்துதல் உள்ளிட்ட திட்டங்கள் இடம்பெற்றன. மொத்தம் ரூ.48,100 கோடி மதிப்பிலான அறிவிப்புகள் 4ம் மற்றும் 5ம் கட்ட அறிவிப்புகளில் இடம் பெற்றன.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நிலா - மதுரை,இந்தியா
17-மே-202022:06:54 IST Report Abuse
நிலா தற்போது உள்ள மத்திய அரசு எப்போது தனியார் மயமாகும் மேடம்?
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
17-மே-202021:16:04 IST Report Abuse
Bhaskaran திட்டங்கள் எல்லாம் ஏட்டில் மட்டுமே .அடிமட்ட ஏழைகளுக்கு ஒருபயனுமில்லை
Rate this:
Cancel
Abbavi Tamilan - Riyadh,சவுதி அரேபியா
17-மே-202017:08:26 IST Report Abuse
Abbavi Tamilan வங்கியில் கொடுக்கும் வட்டியுடன் திரும்ப வசூலுக்கு கடன், ஏற்கெனவே உள்ள நூறு நாள் வாய்ப்பு திட்டம், விவசாய நிதி உதவி போன்றவற்றை கழித்து விட்டு, மத்திய அரசின் பங்காக என்ன செய்திர்கள் என்பதை மட்டும் கணக்கு காட்டுங்கள். விட்டால் பக்கத்து வீட்டுகாரன் கொடுத்த கடனையும் சேர்த்து கணக்கு காட்டுவீர்கள்
Rate this:
Nellai Ravi - Nellai,இந்தியா
17-மே-202021:22:47 IST Report Abuse
Nellai Raviசவூதி ல tax மூணு மடங்கு ஆகிட்டாங்களாமே ?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X