மருத்துவ பரிசோதனையில் 8 தடுப்பூசிகள்; உலக சுகாதார நிறுவனம் தகவல்

Updated : மே 17, 2020 | Added : மே 17, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
corona, coronavirus, Corona vaccine, who, world health organisation,US, China, germany, COVID-19 patients, health, covid-19, corona outbreak, corona drug, corona news,  கொரோனா, கொரோனாவைரஸ், கோவிட்-19

ஜெனிவா: கொரோனாவை தடுக்கும் வகையில் 8 தடுப்பூசிகள் மருத்துவ பரிசோதனையில் உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகத்தை அச்சுறுத்தி வரும் கொரோனாவிற்கு தடுப்பூசி மற்றும் மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் அமெரிக்கா, சீனா மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் தீவிரமாக உள்ளன. கொரோனாவுக்கு தடுப்பூசி எப்போது கண்டுபிடிக்கப்படும் என்பதை சீனாவும், அமெரிக்காவும் வெளிப்படையாக அறிவித்துள்ளன.

அடுத்தாண்டு மார்ச் முதல் ஜூன் மாதத்திற்குள் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்துவிடுவோம் என சீனா தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், இந்தாண்டு இறுதிக்குள் கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்துவிடுவோம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.இவ்வாறு உலக நாடுகள் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் தீவிரமாக உள்ள நிலையில், உலகளவில் 46 லட்சம் பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,11,425 பேர் உயிரிழந்துள்ளனர்.


latest tamil news



இந்நிலையில், 8 தடுப்பூசிகள் மருத்துவ பரிசோதனையில் உள்ளது எனவும், மேலும் 110 மருந்துகள் பல்வேறு கட்ட பரிசோதனையில் உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilnesan - Muscat,ஓமன்
18-மே-202012:27:20 IST Report Abuse
Tamilnesan கோடிக்கணக்கானவர்கள் மாண்டபிறகு தான் தடுப்பூசி சந்தைக்கு வரும்போல உள்ளது.
Rate this:
Cancel
Balaji - Chennai,இந்தியா
17-மே-202015:54:23 IST Report Abuse
Balaji WHO = Waste Health organisation..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X