பொது செய்தி

தமிழ்நாடு

புதிய தளர்வுகளுடன் தமிழகத்தில் மே 31 வரை ஊரடங்கு ; சென்னை, காஞ்சி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் புதிய தளர்வு இல்லை

Updated : மே 17, 2020 | Added : மே 17, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
தமிழகம், ஊரடங்கு, தளர்வு, முதல்வர்இபிஎஸ்,

சென்னை: தமிழகத்தில் அமலில் உள்ள ஊரடங்கு மே 31 வரை நீட்டிக்கப்படுவதாகவும், 25 மாவட்டங்களில் மேலும் புதிய தளர்வுகளுடனும், சென்னை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் புதிய தளர்வுகள் ஏதும் இல்லை என முதல்வர் இபிஎஸ் அறிவித்துள்ளார். இதனை தொடர்ந்து ஊரடங்கு நீட்டிப்பு, கட்டுப்பாடுகள் குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

இது தொடர்பாக முதல்வர் இ.பி.எஸ்., வெளியிட்ட அறிக்கை விவரம் வருமாறு :

தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு உத்தரவு 31.5.2020 நள்ளிரவு 12 மணி வரை ஏற்கனவே நடைமுறையில் உள்ள வரைமுறைகளுடனும், தளர்வுகளுடனும் நீட்டிப்பு செய்யப்படுகிறது.


ஏற்கனவே உள்ள தடைகள்



பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களில் தொடர்ந்து செயல்பட தடை நீடிக்கிறது.

* வழிபாட்டு தலங்களில் பொதுமக்கள் வழிபாடு மற்றும் அனைத்து மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை

* கேளிக்கை கூடங்கள், மதுக்கூடங்கள், உடற்பயிற்சி கூடங்கள், கடற்கரை, சுற்றுலா தலங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், நீச்சல் குளங்கள், விளையாட்டு அரங்குகள், பெரிய அரங்குகள் கூட்ட அரங்குகள் போன்ற இடங்கள் தடை நீடிக்கும்

* அனைத்து வகையான சமய, சமுதாய, அரசியல் விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாச்சார நிகழ்வுகள், விழாக்கள் கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்களுக்கு தடை

* பொது மக்களுக்கான விமானம், ரயில், பஸ் போக்குவரத்து, மாநிலங்களுக்கு இடையிலான ரயில் போக்குவரத்து, சென்னை மாநகரத்தில் இருந்து பிற பகுதிகளுக்கு ரயில் போக்குவரத்து அனுமதி கிடையாது...

* டாக்ஸி, ஆட்டோ, சைக்கிள் ரிக்ஷா,

* மெட்ரோ ரயில் மற்றும் மின்சார ரயில்

* தங்கும் விடுதிகள்( பணியாளர் விடுதிகள் தவிர) தங்கும் ஓட்டல்கள், ரிசார்ட்கள் செயல்பட தடை

இறுதி ஊர்வலத்தில் 30 நபர்களுக்கு மேல் பங்கேற்கக்கூடாது.

* திருமண நிகழ்ச்சிகளுக்கு தற்போது உள்ள நடைமுறைகள் தொடரும்.


latest tamil news




எந்த மாவட்டங்களில் தளர்வுகள் இல்லை?



* சென்னை , காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய 12 மாவட்டங்களில் ஏற்கனவே நடைமுறையில் எந்த மாற்றமும் இல்லாமல் தொடரும். தளர்வுகள் ஏதும் இல்லை.

* நீலகிரி, கொடைக்கானல் மற்றும் ஏற்காடு சுற்றுலா தலத்திற்கு வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்படுகிறது.

* தமிழகம் முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போது உள்ள நடைமுறைகளின்படி எந்தவிதமான தளர்வுகளும் இன்றி ஊரட்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்

* சென்னை போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகள் தவிர தமிழகத்தின் மற்ற பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர பிற பகுதிகள் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுக்கு அனுமதி தொடரும்


புதிய தளர்வுகள்



ஊரடங்கை படிப்படியாக விலக்க பரிந்துரை செய்ய அமைக்கப்பட்ட உயர்மட்ட குழுவின் பரிந்துரைப்படி கீழ்கண்ட தளர்வுகள் அறிவிக்கப்படுகிறது.

* கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாபுரம், திண்டுக்கல், புதுக்கோட்டை, திருச்சி, திருவாரூர், தஞ்சாவூர், நாகை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மற்றும் நீலகிரி ஆகிய 25 மாவட்டங்களுக்கு மட்டும் கீழ்கண்ட சில தளர்வுகள் வழங்கப்படுகின்றன.

* அந்தந்த மாவட்டத்திற்குள் போக்குவரத்திற்கு மட்டும் இ பாஸ் இல்லாமல் இயங்க தளர்வு அளிக்கப்படுகிறது.

* மாவட்டத்திற்குள் நோய் தொற்று பரவாமல் தடுக்க பொது மக்கள் அனுமதிக்கப்பட்ட பணிகளுக்கும், அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் சென்று வர போக்குவரத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

* ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்திற்கு சென்று வர இபாஸ் பெற்று செல்லும் தற்போதைய நடைமுறையே தொடரும்.

* அரசுப்பணிகள் மற்றும் தனியார் தொழிற்சாலைகளுக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டு இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பஸ்களில் அதிகபட்சமாக 20 நபர்களும், வேன்களில் 7 நபர்களும், இன்னோவா போன்ற பெரிய வகை கார்களில் 3 நபர்களும், சிறிய கார்களில் 2 நபர்களும்( வாகன ஓட்டுநர் தவிர்த்து) செல்ல அனுமதி வழங்கப்படுகிறது.

* மாவட்டங்களுக்குள் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ள 25 மாவட்டங்களில் இபாஸ் இல்லாமல் வாடகை மற்றும் டாக்சி வாகனங்களை அத்தியாவசிய பணிகளுக்கான விவசாயம், வியாபாரம், மருத்துவம் போன்ற பணி நிமித்தம் பயணம் செய்ய மட்டும் பயன்படுத்தப்பட வேண்டும். தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியில் செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும்.

* தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தில், தற்போதுள்ள பணியாளர்களை 50 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக உயர்த்த அனுமதி வழங்கப்படுகிறது.

* சென்னை போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளை தவிர தமிழகத்தில் உள்ள அஐனத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் தற்போதுள்ள தளர்வுபடி 50 நபர்களுக்கு குறைவாக பணிபுரியும் தொழிற்சாலைகளில் 100 சதவீத பணியாளர்களும், 50 நபர்களுக்கு மேல் மேல் உள்ள பணியாளர்களின் எண்ணிக்கை உள்ள தொழிற்சாலைகளில் 50 சதவீதம் பணியாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்ட நிலையில், இதை மேலும் தளர்வு செய்து 100 நபர்களுக்கும் குறைவாக பணிபுரியும் தொழிற்சாலைகளில் 100 சதவீத பணியாளர்களும், 100 நபர்களுக்கு மேல் பணியாளர்களின் எண்ணிக்கை உள்ள தொழிற்சாலைகளில் 50 சதவீதம் பணியாளர்கள் அல்லது குறைந்தபட்சம் 100 பணியாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

* ஊரடங்கு காலத்தில் தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் தனியார் மற்றம் வியாபார நிறுவனஙகளின் அத்யாவசிய பராமரிப்பு பணிகளுக்காக மட்டும் குறைந்தபட்சம் பணியாளர்களுடன் இயக்குவதற்கு அனுமதி

* 12ம் வகுப்பு பொது தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணி மட்டும் நடக்க விலக்களிக்கப்படுகிறது.

*தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு போட்டிகளுக்கு தனி பயிற்சியாளர் மூலம் பயிற்சி பெறுவதற்கு மட்டும்விலக்கு அளிக்கப்படுகிறது. இதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர் , சென்னை மாநகரா கமிஷனரிடம் அனுமதி பெற வேண்டும்.

* மாவட்டங்களுக்குள் போக்குவரத்து அனுமதிக்கப்படாத 12 மாவட்டங்களில் இபாஸ் உடன் மருத்துவ சிகிச்சைக்கு மட்டும் சென்று வர பயன்படுத்தப்படும் டாக்சி, ஆட்டோவுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது.


மாஸ்க் அணிதல் அவசியம்



மக்கள் மாஸ்க் அணிவது, சமூக விலகல் கடைபிடிப்பது, சோப்மூலம் கைகள கழுவும் நடைமுறையை பின்பற்றவும் போதுமான கிருமிநாசினிகளை பயன்படுத்தவும், பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்பாக பணிபுரிவதை கண்காணிக்க வேண்டும் என அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மாநகராட்சி கமிஷனரகள் அறிவுரைபடுத்தப்படுகிார்கள். ஊரடங்கு உத்தரவு தொடர்வதால், பொது இடங்களில் 5 நபர்களுக்கு மேல் மக்கள் கூடாமல் இருப்பதை கண்காணிக்க வேண்டும். நோய் தொற்றின் பரவலை தமிழக அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. நோய் தொற்று குறைய குறைய தமிழக அரசு மேலும் தளர்வுகளை அறிவிக்கும்.இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


தமிழக அரசு அரசாணை வெளியீடு


4 ம் கட்டமாக மே 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு, கட்டுப்பாடுகள் குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. தமிழகத்தில் சலுான், அழகு நிலையங்களுக்கு விதித்த தடை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishna - bangalore,இந்தியா
17-மே-202021:17:48 IST Report Abuse
Krishna Disease-Under Control due to Lockdown & Hot Climate (Deaths are V.Small & V.Less Compared to Normalcy Except Inflated Corona Deaths by Vested Medical Terrorism) BUT Will RE-FLARE DUE TO Foolish IMPORT OF EXPATRIATES & MIGRANTS (QUARANTINE THEM IN ANDAMANS & LAKSHADEEP). Testing with Infected-Normal Kits-High False Positives (Even in RT-PCRs). DISEASE IMPORTED BY IDIOTIC RULERS &OFFICIALS by Bringing Overseas Citisens. DISEASE ALSO SPREADS BY AIR (All Isolation-Quarantine-HotSpot-GreenOrangeRed Zones, Fencing Etc are Corona Terrorism). ONLY SIMULTANEOUS ALL WORLD-STRICT LOCKDOWN (for 15days With Most essentials Door delivered by Govt Staff followed by Localised Lockdown in Spreading Hotpots-Hi-Concentration Areas for 15days is Sufficient Extendable if Really required Testing Done for Outgoing Persons & Symptomcs). HALTS DANGEROUS SPREAD (Otherwise Remains Long, Flaring Here & There)FOR IDEA STEALNG-IDIOTIC-FAT RULERS &OFFICIALS. Indian Leaders, PM-CM-Ministers-Officials-IAS IPS etc Never Even Positive BUT ScapeGoat-Fool-Terrorise People-Misuse of Powers &Corona Terrorism (Abroad- Even PMs & Bureaucrats-Affected). Punish All Anti-People Corona Terrorists (Health-Police Officials & Testers Giving False Positives-more in MIG-HIG areas But Not in Slums etc).
Rate this:
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
17-மே-202020:56:05 IST Report Abuse
S.Baliah Seer சென்னையில் மட்டும் மூத்த குடிமகன்களுக்கு ஆன்லைன் மூலம் மது விற்பனை செய்யலாம்.எலைட் மதுபான கடைகளில் இந்தியா மற்றும் வெளிநாட்டு மதுபானங்கள் கிடைப்பதால்,விரும்பிய சரக்கை விற்க முடியும்.கைகால் நடுக்கம் ,மற்றும் தூக்கம் வராத வசதி படைத்த வயோதிகர்கள் என்னை திட்டுகிறார்கள்.''போகிறவரை' சந்தோஷமாக வாழட்டும்.இந்த மூத்த 'குடி' மகன்களுக்கு மட்டும் சென்னையில் ஆன்லைனில் மதுவழங்க தமிழக அரசு ஏற்பாடு செய்யலாமே.
Rate this:
Cancel
SANKARAN NAGARAJAN - erode,இந்தியா
17-மே-202018:10:02 IST Report Abuse
SANKARAN NAGARAJAN கீழ்கண்ட விபரத்திற்கு கொஞ்சம் விளக்கம் தேவை : கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாபுரம், திண்டுக்கல், புதுக்கோட்டை, திருச்சி, திருவாரூர், தஞ்சாவூர், நாகை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மற்றும் நீலகிரி ஆகிய 25 மாவட்டங்களுக்கு மட்டும் கீழ்கண்ட சில தளர்வுகள் வழங்கப்படுகின்றன. அந்தந்த மாவட்டத்திற்குள் போக்குவரத்திற்கு மட்டும் இ பாஸ் இல்லாமல் இயங்க தளர்வு அளிக்கப்படுகிறது. இதுவரை சரி ,கீழ்கண்ட வார்த்தை என்ன ?? எப்படி ??எதற்கு ??? ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்திற்கு சென்று வர இபாஸ் பெற்று செல்லும் தற்போதைய நடைமுறையே தொடரும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X