பொது செய்தி

இந்தியா

அமெரிக்காவுக்கும் உதவும் இந்தியா; மறைமுகமாகத் தடுக்கும் சீனா

Updated : மே 17, 2020 | Added : மே 17, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி: கொரோனா வைரஸ் பாதிப்புக்கு அமெரிக்கா, இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் விலை மலிவான ஹைட்ராக்ஸி குளோரோகுவீனை நம்பி உள்ள நிலையில் தற்போது சீனா மூலம் புதிய பிரச்னை ஏற்பட்டுள்ளது.இது குறித்து பார்க்கும் முன்னர் இந்திய மருந்து ஏற்றுமதியின் வரலாற்றைப் பற்றித் தெரிந்துகொள்வது அவசியம். 1970களில் இந்திரா, இந்தியாவின் பிரதமராகப் பதவி வகித்தார். அப்போது இந்திய
America, India, China, HCQ, அமெரிக்கா, சீனா, இந்தியா, ஹைட்ராக்ஸிகுளோரோகுவீன், மருந்து, நெருக்கடி

புதுடில்லி: கொரோனா வைரஸ் பாதிப்புக்கு அமெரிக்கா, இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் விலை மலிவான ஹைட்ராக்ஸி குளோரோகுவீனை நம்பி உள்ள நிலையில் தற்போது சீனா மூலம் புதிய பிரச்னை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து பார்க்கும் முன்னர் இந்திய மருந்து ஏற்றுமதியின் வரலாற்றைப் பற்றித் தெரிந்துகொள்வது அவசியம். 1970களில் இந்திரா, இந்தியாவின் பிரதமராகப் பதவி வகித்தார். அப்போது இந்திய மருந்து தயாரிப்புக்கான காப்புரிமை பெறப்பட்டது. விலை மலிவான மருந்து மாத்திரைகள் தயாரிப்பில் இந்தியா முன்னணி நாடாக அன்றிலிருந்து வலம் வந்தது. விலை மலிவான மருந்துகளில் முக்கியமானது ஹைட்ராக்ஸி குளோரோகுவீன். மலேரியா உள்ளிட்ட நோய்களுக்கு மருந்தாக அமையும் இது, அமெரிக்கா உட்பட பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.


latest tamil news


இதற்கான மூலக்கூறுகளில் 68 சதவீதம் சீனாவில் இருந்து பெறப்படுகிறது. தற்போது அமெரிக்கா, கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஹைட்ராக்ஸி குளோரோகுவீனை பயன்படுத்துகிறது. அமெரிக்காவின் வேண்டுகோளுக்கு இணங்க மோடி அரசு இந்த மருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்தது. அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைச்சகம் (எஃப்.டி.ஏ) ஹைட்ராக்ஸி குளோரோகுவீனை கொரோனாவை போக்கும் மருந்தாக அங்கீகரிக்கவில்லை என்றபோதிலும் இந்த மருந்து அமெரிக்காவில் கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வருகிறது.


latest tamil news


தற்போது சீன- அமெரிக்க மோதலால் புதிய பிரச்னை கிளம்பி உள்ளது. அதன்படி அமெரிக்காவுக்கு ஹைட்ராக்ஸி குளோரோ குவீனை ஏற்றுமதி செய்ய சீன மூலப்பொருட்கள் கிடைப்பதில் சீன அரசு நெருக்கடி கொடுத்து வருகிறது. இதன்காரணமாக கொரோனா அல்லாத பிற நோய்களுக்கு ஹைட்ராக்ஸி குளோரோ குவீனை சாப்பிட்டு வரும் அமெரிக்கர்களுக்கு மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இது டிரம்ப் அரசை ஆத்திரம் அடையச் செய்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ocean kadappa india - kadappa,இந்தியா
17-மே-202020:22:27 IST Report Abuse
ocean kadappa india உலக நாடுகள் அனைத்தும் ஏதாவதொரு விஷயத்தில் சீனாவை தொங்கிக்கொண்டிருக்கின்றன. சீனன் முக்கிய விஷயங்களை தன் கையடக்கத்தில் வைத்திருக்கிறான். ஹடிராக்ஸி குளோரோகுவின் மாத்திரையின் மூலப்பொருள் சைனாவில் தான் கிடைக்குமா. உலக நாடுகள் வேறெங்கிலும் அது கிடைக்காதா. என்னய்யா இது கேலிக்கூத்தாக இருக்கிறதே.
Rate this:
Cancel
chakra - plano,யூ.எஸ்.ஏ
17-மே-202017:35:15 IST Report Abuse
chakra ஹைட்ராக்ஸி குளோரோகுவீன் பிரயோஜனம் இல்லை என்று பல நாடுகள் உபயோகப்படுத்துவதை நிறுத்தி விட்டார்கள்
Rate this:
Srini - ,
17-மே-202019:56:30 IST Report Abuse
Srininot completely true...
Rate this:
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
17-மே-202017:17:26 IST Report Abuse
Tamilan மருந்து மாத்திரையிலும், அதுவும் ஒரு அரசியல் சட்ட அரசுகளே அதுவும் வளர்ந்துவிட்டதாக தம்பட்டம் அடித்துக்கொள்ளும் அரசுகளே அடித்துக்கொள்வது பார்ப்பதற்கே கேட்பதற்கே சகிக்கவில்லை. அதுவும் இப்படிப்பட்ட மருத்துவ அவசர கால கட்டத்திலும்? அனைவரின் வீட்டோவையும் பறிக்க இதைவிட இனியொரு காரணம் தேவையில்லை .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X