பொது செய்தி

இந்தியா

அமெரிக்காவில் சிக்கி தவித்த 168 இந்தியர்கள் நாடு திரும்பினர்

Updated : மே 17, 2020 | Added : மே 17, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி: அமெரிக்காவில் இருந்து வெளியேற முடியாமல் இருந்த 160-க்கும் மேற்பட்ட இந்தியர்களை வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இன்று ஏர் இந்தியா விமானம் மூலம் ஐதராபாத்திற்கு அழைத்து வந்தனர்.கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்திய மக்களை திருப்பி அழைத்துவர மே 7ம் தேதி வந்தே பாரத் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. இத்திட்டத்தின் இரண்டாம் கட்டம்
Vande Bharat, US, Indians, Air India, Flight, Stranded Indians, AI flights, Delhi, India, govt of India, central government, evacuation, அமெரிக்கா, இந்தியர்கள், வந்தேபாரத், ஏர்இந்தியா, விமானம்

புதுடில்லி: அமெரிக்காவில் இருந்து வெளியேற முடியாமல் இருந்த 160-க்கும் மேற்பட்ட இந்தியர்களை வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இன்று ஏர் இந்தியா விமானம் மூலம் ஐதராபாத்திற்கு அழைத்து வந்தனர்.

கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்திய மக்களை திருப்பி அழைத்துவர மே 7ம் தேதி வந்தே பாரத் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. இத்திட்டத்தின் இரண்டாம் கட்டம் சனிக்கிழமை தொடங்கியது. இதற்காக 40 நாடுகளுக்கு 149 விமானங்கள் இயக்கப்படுகின்றன. அதில் ஏர் இந்தியாவின் AI 126 விமானம் அமெரிக்காவின் சிகாகோவிலிருந்து 168 இந்தியர்களை அழைத்துக்கொண்டு இன்று (மே 17) காலை ஐதராபாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தது.


latest tamil news



இதற்காக விமான நிலையத்தின் பிரதான பயணிகள் முனையம் முழுதும் சுத்திகரித்து தூய்மையாக்கி இருந்தனர். விமானத்திலிருந்து வந்த அனைத்து பயணிகள் மற்றும் விமான பணியாளர்கள் தலா 20-25 பேர் கொண்ட குழுவாக பிரிக்கப்பட்டு, வெப்ப கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்ட பின்னர் சமூக இடைவெளியுடன் வெளியே கொண்டு வரப்பட்டனர். அதே சமயத்தில் ஐதராபாத்தில் இருந்து டில்லி வழியாக 68 பயணிகள் இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sapare Aude -  ( Posted via: Dinamalar Android App )
17-மே-202020:12:32 IST Report Abuse
Sapare Aude அமேரிக்காவிற்கு சென்ற இந்தியர்கள் வளமான வாழ்க்கையை தேடிச்சென்று எல்லா சௌகரியங்களுடன் தான் வாழ்ந்து வந்தனர். இப்போது அங்கேயும் கொரானா பாதிப்பு ஏற்ட்டபோது தாய் நாட்டு நினைவு வந்து விட்டது. இந்தியர்கள் எவரும் கஷ்டப்படவில்லை. நம் நாட்டில் புலம்பெயர்ந்து வந்து வாழ வழி இல்லாமல் திணரும் லட்சக்கணக்கானவர்களுக்குத்தான் அரசு உதவி தேவை.
Rate this:
naadodi - Plano,யூ.எஸ்.ஏ
18-மே-202019:45:56 IST Report Abuse
naadodiதிரும்பி போறவங்க டூரிஸ்ட் விசா வில் வந்தவர்கள்...அவர்கள் ஒன்றும் அமெரிக்காவைத் தன் நாடாக ஏற்கவில்லை.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X