நாடு முழுவதும் மே.31 வரை ஊரடங்கு நீட்டிப்பு: மத்திய அரசு| Centre extends lockdown till May 31 | Dinamalar

பொது செய்தி

இந்தியா

நாடு முழுவதும் மே.31 வரை ஊரடங்கு நீட்டிப்பு: மத்திய அரசு

Updated : மே 17, 2020 | Added : மே 17, 2020 | கருத்துகள் (4)
Share
புதுடில்லி: கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு இரண்டு வாரம் (மே 31 வரை) நாடு முழுவதும் நீட்டிக்க மத்திய அரசுக்கு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம்(என்டிஎம்ஏ) பரிந்துரை செய்தது. இதனை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு மே.31 வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தது.கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, கடந்த மார்ச், 25 முதல், ஏப்ரல், 14 வரை, நாடு
ஊரடங்கு, கொரோனா, கொரோனாவைரஸ், லாக்டவுன், தேசியபேரிடர்மேலாண்மை ஆணையம், என்டிஎம்ஏ, பரிந்துரை, மததிய அரசு, தளர்வு, coronavirus, corona, covid-19, corona outbreak, corona updates, corona news, corona cases, new corona cases, positive cases, corona patients, corona drug, corona spread

புதுடில்லி: கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு இரண்டு வாரம் (மே 31 வரை) நாடு முழுவதும் நீட்டிக்க மத்திய அரசுக்கு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம்(என்டிஎம்ஏ) பரிந்துரை செய்தது. இதனை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு மே.31 வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, கடந்த மார்ச், 25 முதல், ஏப்ரல், 14 வரை, நாடு முழுதும், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பின், கடந்த 3 வரை, இரண்டாவது முறையாகவும், கடந்த 17 வரை, மூன்றாவது முறையாகவும் நீட்டிக்கப்பட்டது.இந்நிலையில், 17க்கு பிறகு சில தளர்வுகளுடன், நான்காம் கட்டமாக, ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பிருப்பதாக, பிரதமர் நரேந்திர மோடி, சமீபத்தில் தெரிவித்தார்.


latest tamil newsஇந்நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு என்டிஎம்ஏ பரிந்துரை செய்துள்ளது. இதனை ஏற்று கொண்டு மத்திய அரசு சில தளர்வுகளுடன் மே.31 வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X