4 ம் கட்ட ஊரடங்கு; தளர்வுகள் எவை : மத்திய அரசு

Updated : மே 17, 2020 | Added : மே 17, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement

புதுடில்லி: பச்சை மண்டலங்களில் பொருளாதார நடவடிக்கைகளுக்கு நிபந்தனைகளுடன் கூடிய அனுமதி வழங்கப்படும் என மத்திய உள்ளதுறை அமைச்சகம் வெளியிட்டுள்ள 4-ம் கட்ட ஊரடங்கு வழிகாட்டுதல் நெறி முறைகளில் தெரிவித்துள்ளது.



latest tamil news



மத்திய அரசு அறிவித்து உள்ள நாடு முழுவதுமான 3-ம் கட்ட ஊரடங்கு இன்று நள்ளிரவு 12 மணியுடன் முடிவடையும் நிலையில் வரும் 31ம் தேதி பொது முடக்கத்தை நீட்டிப்பு செய்துள்ளது 4-ம் கட்ட ஊரடங்கிற்கான வழிகாட்டுநெறிமுறைகளை மத்திய அரசின் உள் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.


அதில் கூறப்பட்டு இருப்பதாவது:


பொது இடங்களிலும் பணி இடங்களிலும் முக கவசம் அணிவது கட்டாயம்.

ஹோட்டல்கள் மது பான கூடங்களுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை தொடரும். தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகள் தொடரும்.

பார்வையாளர்கள் இன்றி விளையாட்டு அரங்கை திறக்க அனுமதிக்கப்படுகிறது. திருமண விழாக்களில் அதிகபட்சம் 50 பேர் வரையில் பங்கேற்கலாம். இறுதி சடங்கில் 20 பேர் மட்டுமே பங்கேற்கலாம்.


latest tamil news



உடற்பயிற்சி கூடங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்.

பச்சை மண்டலங்களில் பொருளாதார நடவடிக்கைகளுக்கு நிபந்தனைகளுடன் கூடிய அனுமதி வழங்கப்படுகிறது.சிவப்பு மஞ்சள் பச்சை மண்டலங்கள் எவை என்பதை மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம்.

மாநிலங்களுக்குள் பேருந்துகளை இயக்க மத்திய அரசு அனுமதி. பேருந்துகள் இயக்குவதை மாநில அரசுகள் முடிவு செய்யும்

அத்தியாவசிய தேவை தவிர இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை மக்கள் வெளியே வர கூடாது.

திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளில் 50 பேர் வரை பங்கேற்கலாம். தனிமனித இடைவெளி, மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும்.

மாநில அரசுகள் அனுமதி அளித்தால் சிவப்பு மண்டலங்களில் சலூன்கள், அழகு நிலையங்கள் திறக்கலாம்.

நிறுவனங்கள் இயன்ற அளவு பணியாளர்களை வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதிக்க வேண்டும்.

அனுமதிக்கப்பட்ட கடைகளில் 5 நபர்களுக்கு மேல் கூட தடை.

ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிட தடை நீட்டிப்பு; டோர் டெலிவரி செய்ய அனுமதி.

வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மதம் சார்ந்த இடங்களில் பொதுமக்கள் கூட்டமாக கூட தடை நீட்டிப்பு.

பார்வையாளர்கள் இல்லாமல் விளையாட்டு அரங்குகளை திறக்க அனுமதி. இவ்வாறு தளர்வுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sundarsvpr - chennai,இந்தியா
17-மே-202021:52:33 IST Report Abuse
sundarsvpr பாரதம் வளர்ந்த வரும் நாடு. மக்கள் பெருக்கம் நெருக்கம் கொண்ட நாடு. இந்த நிதியாண்டில் எல்லா நாடுகளும் பொருளாதார சிக்கலில் உள்ளது. பாரதம் போராடிக்கொண்டுஇருக்கிறது. 4 .0 ஊரடங்கு தொடர்கிறது. முதலில் மக்கள் கட்டுப்பாடு அவசியம். எதிர்க்கட்சிகள் நேர்முறை சிந்தனைகளை மக்களிடை கொண்டுசெல்லவேண்டும். முக்கியமாய் கொண்டுசெல்லவேண்டிய இரண்டு எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன. கொரோனா சூ மந்திரம் போட்டு தீர்க்கிற விவகாரம் இல்லை. திட்டவட்ட செயல் முறை காணுவது கடினம். மக்கள் பீதியடைந்தால் பிரச்சனையை கடவுளாலும் தீர்க்க இயலாது. கொரோனா அதாவாகே பின்வாங்கும்.
Rate this:
Cancel
mindum vasantham - madurai,இந்தியா
17-மே-202021:00:52 IST Report Abuse
mindum vasantham ஏர்போர்ட் துறையில் இப்போ லாபமே இல்லை கிங்பிஷர் எல்லாம் முடியாச்சு ஏர் இந்தியா பெருத்த நஷ்டம் அங்கே முதலீடு கொண்டு வந்தால் என்ன , 92 இல் அதிக துறையில் அந்நிய முதலீடு கொண்டு வந்தவர் தான் மன்மோகன் சிங்க் இப்ப இவனுங்க என் குதிக்கிறாங்க
Rate this:
தியாகி சுடலை மன்றம்எந்த மன்னும் ஒரு மண்ணும் கொண்டு வரவ சும்மா அளக்காத...
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
18-மே-202000:03:02 IST Report Abuse
 ஜெய்ஹிந்த்புரம்ராணுவ தளவாடங்களை இறக்குமதி செய்வோம். மெயிண்டநன்ஸை அம்பானிக்கு அள்ளிக்கொடுப்போம். மேக் இன் இந்தியான்னு சொல்லுவோம். அதுக்கு மேலே எல்லாம் நேருவோட தப்புன்னு சொல்லுவோம்....
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
18-மே-202000:05:30 IST Report Abuse
 ஜெய்ஹிந்த்புரம்ஆனா, இப்பவும் அந்த பாவப்பட்ட ஒரு கோடி புலம்பெயர் தொழிலாளர்களை வீட்டுக்கு கொண்டு போய் சேர்க்க ஒரு முழுமையான திட்டம் போடமாட்டோம். அவன் என்ன செய்வான்னு சிந்திக்க மாட்டோம். ஏசி காரில் பயணித்து ஏசி ரூமில் அமர்ந்து கொண்டு "திட்டம்" போடுவோம். கட்சிக்கு எவ்வளவு கமிஷன் அடிக்கலாமுன்னு....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X