தெலுங்கானாவில் புதிதாக 55 பேருக்கு கொரோனா

Updated : மே 17, 2020 | Added : மே 17, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

ஐதராபாத் : தெலுங்கானாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து 55 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதாக அம்மாநில சுகாதாரதுறை தெரிவித்தது.



latest tamil news




இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நோய் பரவலை கட்டுக்கும் வைக்க மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேம்படுத்துகிறது. தெலுங்கானாவில் கொரோனா பாதிப்பு 1000 ஐ தாண்டி செல்கிறது. இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 55 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 1509 ஆக அதிகரித்தது. பாதிக்கப்பட்டவர்களில், 44 பேர் ஐதராபாத் நகர பகுதிகளிலும், 2 பேர் சங்காரெட்டியிலும், ஒருவர் ரங்காரெட்டி மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள். மற்ற 8 பேர் வெளிமாநில தொழிலாளர்கள் என தெரிய வந்துள்ளது.


latest tamil news




காந்தி மருத்துவமனையில் 12 பேர் புதிதாக குணமடைந்து சென்றனர். இதன் மூலம் நோய் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 971 ஆக உள்ளது. மீட்பு விகிதம் 64 சதவீதமாக உள்ளது. நேற்று வரை காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 504 ஆக இருக்கிறது. கடந்த 1 வாரத்தில் பாதிப்பு அதிகரித்து 377 ஆக உள்ளது. 3 வது ஊரடங்குகளில் 52 வெளிமாநில தொழிலாளர்களுக்கு கொரோனா கண்டறியப்பட்டது. இவ்வாறு
தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajesh - Chennai,இந்தியா
18-மே-202003:16:10 IST Report Abuse
Rajesh இரண்டுக்கு மேல் குழந்தை கூடாது என்று கடுமையான சட்டம் வரவேண்டும் [எல்லா மதத்தவரும்].... எங்கு பார்த்தாலும், மனிதரை தவிர வேறு ஒன்றும் இல்லை இந்த நாட்டில்... நம் முழித்துக்கொள்ளவேண்டிய நேரமிது......
Rate this:
Cancel
17-மே-202020:47:58 IST Report Abuse
ஆப்பு இதோ இன்னும் மூணே நாளில் ஓட்டிருவோம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X