உலக கொரோனா பாதிப்பு 4.6 மில்லியனை கடந்தது ; ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலை

Updated : மே 17, 2020 | Added : மே 17, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

வாஷிங்டன் : உலகளவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து 4.6 மில்லியனை தாண்டியதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலை தகவல் தெரிவித்துள்ளது.latest tamil newsகொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளிலும் பரவி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்கிறது. பல நாடுகளிலும் நோய் பரவலை கட்டுக்கும் வைக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. உலகளாவிய கொரோனா பாதிப்புகள் 4.6 மில்லியனை தாண்டி சென்றது. இதுவரை பலியானவர்களின் விகிதம் 3,11,000 தாண்டியது என ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலை தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இன்று (மே.,17) காலை நிலவரப்படி, மொத்த கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 4,634,068 ஆகவும், பலியானவர்களின் எண்ணிக்கை 311,781 ஆகவும் அதிகரித்துள்ளது.


latest tamil newsகொரோனா தாக்கம் காரணமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் அதிக பாதிப்புகளுடன் அமெரிக்கா முன்னிலையில் உள்ளது. இங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,467,796 ஆகவும், பலியானவர்களின் எண்ணிக்கை 88,754 ஆகவும் அதிகரித்தது. அதையொட்டி, அதிக பாதிப்புகளுடன் ரஷ்யா 2 வது இடத்தில் உள்ளது. அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,72,043 ஆக இருக்கிறது. மேலும், பிரிட்டனில் (241,461), பிரேசில் (233,142), ஸ்பெயின் (230,698), இத்தாலி (224,760), பிரான்ஸ் (179,630), ஜெர்மனி (175,752), துருக்கி (148,067) மற்றும் ஈரான் (118,392) என பல்கலையின் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் மையம் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் உலகளவில் 2 வதாக கொரோனா பாதிப்புகளின் அதிகபட்ச பலி எண்ணிக்கை 34,546 ஆக உள்ளன. தொடர்ந்து, ஐரோப்பிய நாடுகளில், 10,000 க்கும் மேற்பட்ட கொரோனா பலிகளை கொண்ட நாடுகளாக இத்தாலி (31,763), ஸ்பெயின் (27,563), பிரான்ஸ் (27,532), மற்றும் பிரேசில் (15,662) உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Bangalore,இந்தியா
17-மே-202021:08:27 IST Report Abuse
Ramesh Sargam வைரஸை உண்டாக்கி, அதை உலகெங்கிலும் பரப்பி பல லட்சம் மக்களை கொன்ற சீனா முற்றிலும் அழிக்கப்படவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X