கொரோனா தாக்கத்தால் பிரான்ஸ் இஸ்லாமியர்களுக்கு ஏற்பட்ட நன்மை..!| France relaxes burqa restrictions | Dinamalar

கொரோனா தாக்கத்தால் பிரான்ஸ் இஸ்லாமியர்களுக்கு ஏற்பட்ட நன்மை..!

Updated : மே 17, 2020 | Added : மே 17, 2020 | கருத்துகள் (18)
Share
பாரிஸ்: பிரான்ஸ் நாட்டில் கடந்த 2010-ம் ஆண்டு முதலே இஸ்லாமிய பெண்கள் முகத்தை மறைக்கும் புர்கா அணியலாமா வேண்டாமா என்ற விவாதம் சென்றுகொண்டே இருக்கிறது.பிரான்ஸில் சிறுபான்மையினர் காலாகாலமாக மதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களது மத சுதந்திரத்தில் தலையிடக் கூடாது. இஸ்லாமிய பெண்கள் பொது இடங்களுக்கு புர்கா அணிந்து வருவதை யாரும் தடுக்கக்கூடாது என எதிர்கட்சிகள், சமூக

பாரிஸ்: பிரான்ஸ் நாட்டில் கடந்த 2010-ம் ஆண்டு முதலே இஸ்லாமிய பெண்கள் முகத்தை மறைக்கும் புர்கா அணியலாமா வேண்டாமா என்ற விவாதம் சென்றுகொண்டே இருக்கிறது.latest tamil newsபிரான்ஸில் சிறுபான்மையினர் காலாகாலமாக மதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களது மத சுதந்திரத்தில் தலையிடக் கூடாது. இஸ்லாமிய பெண்கள் பொது இடங்களுக்கு புர்கா அணிந்து வருவதை யாரும் தடுக்கக்கூடாது என எதிர்கட்சிகள், சமூக ஆர்வலர்கள், சமூக நல அமைப்புகள் நீதிமன்றத்தில் வழக்காடி வந்தன. கடந்தை 2019ம் ஆண்டு பிரான்ஸ் அரசு அலுவலகம் இஸ்லாமியர் ஒருவரால் தாக்கப்பட்டது.

அப்போது துவங்கி அங்கு இஸ்லாமியர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல்கொடுத்தனர். பிரான்ஸில் அனைவரும் சந்திக்கும்போது கன்னத்தில் முத்தமிட்டுக்கொள்வது வழக்கம். ஆனால் இஸ்லாமியர்கள் கட்டுப்பிடித்து பேசுவர். இது பிரான்ஸ் கலாசாரத்துக்கு எதிரானது என கூறப்பட்டது. மேலும் இஸ்லாமிய ஆண்கள் தாடி வளர்க்க எதிர்ப்பு குரல் வந்தது. பிரான்ஸ் இஸ்லாமிய மாணவிகள் வகுப்பறைகளில் புர்கா அணியத் தடை விதிக்கப்பட்டது. இஸ்லாமியர்களை வைத்து பிரான்ஸில் மிகப்பெரிய அரசியல் நடப்பதாக பிரான்ஸ் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.

தற்போது கொரோனா தாக்கத்தை முன்னிட்டு குடிமக்கள் அனைவரும் பொது இடங்களில் கட்டாயமாக மாஸ்க் அணிய பிரான்ஸ் அரசு உத்தரவிட்டுள்ளது. பொது இடங்களில் புர்கா அணிவதே பிரான்ஸ் கலாசாரத்துக்கு எதிரானது என கூறப்பட்ட நிலையில் தற்போது கொரோனா காரணமாக அந்த கட்டுப்பாடு சற்று தளத்தப்பட்டு உள்ளது. எப்படி எனக் கேட்கிறீகளா?


latest tamil newsபொது இடங்களில் மாஸ்க் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளதால் புர்கா அணிவதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. புர்காவை ஒரு பெரிய சைஸ் மாஸ்க் போலவே பிரான்ஸ் அதிகாரிகள் கருதுகின்றனர். இது அந்நாட்டு சமூக ஆர்வலர்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X