தமிழகம் முழுவதும் பரவலாக மழை| Heavy rain hit several parts of Tamil Nadu | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் பரவலாக மழை

Updated : மே 17, 2020 | Added : மே 17, 2020
Share

சென்னை: சேலம், கோவை, திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலுார், ஈரோடு மற்றும் மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்கிறது.



latest tamil news



மதுரை மாவட்டத்தில், கொட்டாம்பட்டி, கருங்காலக்குடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மழை மின்னலுடன் கனமழை பெய்கிறது.
ஈரோடு சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கன மழை பெய்கிறது.


latest tamil news



உம்பன் புயல் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு கோயம்புத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

வட தமிழகத்தில் இன்று முதல் அடுத்த இரண்டு நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இன்று இரவு தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து இதமான சூழ்நிலை உருவாகி வருகிறது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X