மஹா.,வில் இன்று 2,347 பேருக்கு கொரோனா; பாதிப்பு 33 ஆயிரத்தை கடந்தது| 2, 347 new COVID-19 cases in Maharashtra | Dinamalar

மஹா.,வில் இன்று 2,347 பேருக்கு கொரோனா; பாதிப்பு 33 ஆயிரத்தை கடந்தது

Updated : மே 17, 2020 | Added : மே 17, 2020 | கருத்துகள் (1)
Share
Maharashtra, coronavirus, covid-19, corona, corona outbreak, corona updates, corona news, corona cases, india, corona in maharshtra, corona deaths, BMC, corona death, corona spread, Mumbai

மும்பை: மஹாராஷ்டிர மாநிலத்தில் இன்று(மே 17) புதிதாக 2,347 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து மாநிலத்தில் மொத்த பாதிப்பு 33 ஆயிரத்தை கடந்தது.

சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்க, மே 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு தளர்வுகளுடன் இருக்கும் என அறிவித்த மத்திய அரசு, தளர்வுகள் குறித்த விவரங்களையும் வெளியிட்டுள்ளது.


latest tamil news


நாட்டில் அதிக கொரோனா பாதிப்பு உள்ள மாநிலமாக மஹாராஷ்டிரா உள்ளது. அங்கு இன்று புதிதாக 2,347 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 33,053 ஆக அதிகரித்தது. இன்று மேலும் 63 பேர் பலியாகினர். இதனையடுத்து மொத்த பலி 1,198 ஆக உயர்ந்தது. இன்று ஒரே நாளில் 600 பேர் குணமாகி வீடு திரும்பியதையடுத்து, குணமானவர்களின் மொத்த எண்ணிக்கை 7,688 ஆக அதிகரித்தது. இதனை மஹாராஷ்டிர சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X