ஆப்கனில் கனி-அப்துல்லா கூட்டு அரசு பயங்கரவாதத்தை ஒடுக்குமா?

Updated : மே 17, 2020 | Added : மே 17, 2020
Share
Advertisement
Afghanistan, Ghani, Abdullah, sign, power, sharing, deal,  power-sharing deal,

காபூல்: கொரோனா பரவும் இந்த வேளையில் ஆப்கானிஸ்தானில் அரசியல் குழப்பம் நீடித்து வந்தது. அதிபர் அஸ்ரப் கனி மற்றும் அப்துல்லா அப்துல்லா ஆகியோருக்குள் பதவிப் போர் நடைபெற்றது. தற்போது அதனை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் பதவியை சமமாகப் பங்கிடும் ஒப்பந்தம் இடப்பட்டுள்ளது.

கனியின் செய்தித் தொடர்பாளர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் அப்துல்லா அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் தலைமை தாங்குவார் என்றுள்ளார். மற்ற விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. கடந்த ஆண்டு செப்., மாதம் கனி அதிபர் தேர்தலில் வென்றதை அடுத்து தலைமை செயலாளராகப் பணியாற்றிய அப்துல்லா பதவிக்கு சிக்கல் நீடித்தது. ஆனால் கனியின் வெற்றியை அப்துல்லா ஏற்கவில்லை. தன்னையே அதிபராக அறிவித்துக்கொண்டு அவர் கடந்த மார்ச் 9ம் தேதி பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.


latest tamil news


ஆப்கானிஸ்தான் நேஷனல் ரீகன்சைலேஷன் ஹை கவுன்ஸிலுக்கு அப்துல்லாவே தலைமை வகிப்பார் எனத் தகவல் வெளியாகி உள்ளது. எதிராளிகளான இருவரும் கொரோனா தாக்கதை அடுத்து சரிந்த பொருளாதாரத்தை மீட்கவும் மக்களின் உயிர்களைக் காக்கவும் பதவிகளை சமமாகப் பங்கிட்டுக்கொள்ள முடிவெடுத்தனர்.

இந்த பதவிப் பங்கீட்டின்போது அப்கானிஸ்தானை ஆக்கிரமிக்க முயலும் பயங்கரவாத அமைப்பான தாலிபானுடன் சுமூகப் பேச்சுவார்த்தை நடத்த அப்துல்லா நியமிக்கப்பட்டது அமெரிக்காவுக்கு சற்று ஆறுதலான விஷயமாக அமைந்துள்ளது. இதனால் அமெரிக்கா அப்கானிஸ்தானில் உள்ள தனது படைகளைத் திரும்பப் பெரும் என நம்பப்படுகிறது. சர்வதேச பயங்கரவாதத்தை ஒழிக்க கனி, அப்துல்லா ஆகியோர் கூட்டாக செயல்படவேண்டும் என நடுநிலையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X