பாக்.,கில் பிரதமர் மாளிகையின் ஊழியர்கள் 4 பேருக்கு கொரோனா| COVID-19: 4 staff from Pakistan PM House test positive | Dinamalar

பாக்.,கில் பிரதமர் மாளிகையின் ஊழியர்கள் 4 பேருக்கு கொரோனா

Updated : மே 17, 2020 | Added : மே 17, 2020 | கருத்துகள் (1)
Share
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில், பிரதமர் மாளிகையின் ஊழியர்களில் மேலும் 4 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்தது.கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளிலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. பாக்.,கிலும் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து கூடிக்கொண்டே செல்கிறது. நோய் பரவலை கட்டுக்கள் வைக்க பல நாடுகளில் முழுவதும் ஊரடங்கு

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில், பிரதமர் மாளிகையின் ஊழியர்களில் மேலும் 4 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்தது.latest tamil newsகொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளிலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. பாக்.,கிலும் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து கூடிக்கொண்டே செல்கிறது. நோய் பரவலை கட்டுக்கள் வைக்க பல நாடுகளில் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பாக்.,பிரதமர் இம்ரான் கானின் பிரதமர் அலுவலகத்தில் உள்ள ஊழியர்கள்4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இது பிரதமர் அலுவலகத்தில் பதிவான 2 வது கொரோனா பாதிப்பாகும். இதையொட்டி, பிரதமர் அலுவலகத்தில் உள்ள ஊழியர்களுக்கு பரிசோதனையை செய்ய சுகாதாரதுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்ந்து, பாக்.,கில் ஏப்., மாதத்தில் பெரிய தொண்டு நிறுவனமான எடி அறக்கட்டளையின், தலைவரான பைசல் எடி, சமீபத்தில் பிரதமர் இம்ரானை சந்தித்து பேசினார். பின் அவருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதியானது. பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து ரூ.1 மில்லியன் (Dh 224,389) நிதிக்கான காசோலை அவருக்கு வழங்கப்பட்டது. நோய் தொற்றால் அவர் தனிமைப்படுத்தப்பட்டு, இம்மாதத்தில் நோய் குணமடைந்து வெளியேறினார். பின் பாக்., பிரதமர் இம்ரான், தானாக முன்வந்து கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். எவ்வாறாயினும் ,பிரதமர் அலுவலகத்தின் ஊழியர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்ற அறிவுறுத்தலுக்கு இணங்க, பரிசோதனை நடத்தப்பட்டது.


latest tamil newsபரிசோதனை செய்யப்பட்ட ஊழியர்களில் சிலருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டனர். பிரதமர் அலுவலக கட்டிடத்தின் மூலை முடுக்கெல்லாம் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுமாறும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறினர்.

இதற்கிடையில், பிரதமரின் சிறப்பு உதவியாளர் டாக்டர் ஷெபாஸ் கில் கூறுகையில், பிரதமர் மாளிகையின் ஊழியர்களில் சிலருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. நோய் தொற்றுடையவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். மற்ற அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தொடங்கப்பட்டுள்ளன. இதில் அசாதாரனமானது ஏதுமில்லை. இவ்வாறு டுவிட்டரில் பதிவிட்டார்.

தொற்று நோய் பாதித்த அதிகாரிகள், சமீபத்திய நாட்களில் எந்தவொரு முக்கியமான ஆளுமையுடனும் நேரடியாக தொடர்பு கொள்ளவில்லை. இதற்கு முன்னதாக பாக்., பாராளுமன்ற சபை, தேசிய சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் செனட் உறுப்பினர்களிடையே கொரோனா வைரஸ் பாதிப்புகளையும் அறிவித்தது. பாக்.,கில் இதுவரை 873 பேர் பலியானதுடன் 40,000 க்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்புகளும் உள்ளன. நோய் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 11,341 ஆக உள்ளது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X