பொது செய்தி

இந்தியா

ஊரடங்கால் 61 சதவீதம் இந்தியர்கள் மனநிலை பாதிப்பு: ஆய்வில் தகவல்

Updated : மே 17, 2020 | Added : மே 17, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
புதுடில்லி: ஊரடங்கால் ஏற்பட்ட நிச்சயமற்ற தன்மை மற்றும் நிதி நெருக்கடி காரணமாக 61 சதவீத இந்தியர்கள் மனநலம் தொடர்பான பிரச்னைகளை சந்தித்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது தி மேவரிக்ஸ் இந்தியா, ஜெனரல் இசட் உள்ளிட்டவை ரீபூட்டிங் 2020 எஸ்டோரி ஆப் கோவிட் 19 மற்றும் ஷிப்டிங் பெர்செப்சன்ஸ் குறித்து கணக்கெடுப்பை நடத்தியது. ஆன்லைன் மூலம் ஏப்ரல் மே மாத கால இடைவெளியில்

புதுடில்லி: ஊரடங்கால் ஏற்பட்ட நிச்சயமற்ற தன்மை மற்றும் நிதி நெருக்கடி காரணமாக 61 சதவீத இந்தியர்கள் மனநலம் தொடர்பான பிரச்னைகளை சந்தித்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது



latest tamil news



தி மேவரிக்ஸ் இந்தியா, ஜெனரல் இசட் உள்ளிட்டவை ரீபூட்டிங் 2020 எஸ்டோரி ஆப் கோவிட் 19 மற்றும் ஷிப்டிங் பெர்செப்சன்ஸ் குறித்து கணக்கெடுப்பை நடத்தியது. ஆன்லைன் மூலம் ஏப்ரல் மே மாத கால இடைவெளியில் இது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.

இதில்பெண்கள் தங்களின் வீட்டு வேலைகளுக்கு உதவியாளர்களின் உதவி கிடைக்காமல் அனைத்து வேலைகளையும் தாங்களே செய்யவேண்டியதிருப்பதால் அவர்களின் பணிச்சுமை கூடி உள்ளதாக தெரிய வந்துள்ளது.

72 சதவீதம் பேர் பொருளாதார மீட்சி நடவடிக்கை ஒரு ஆண்டுக்குள் நடைபெறும் என்று எதிர்பார்க்கவில்லை எனவும் 26 சதவீதம் பேர் பொருளாதாரம் குறித்து அவநம்பிக்கையும் தெரிவித்துள்ளனர்.


latest tamil news



மேலும் 63 சதவீதம் உடல் ஆரோக்கியம் குறித்து சிறப்பு கவனம் செலுத்துவதோடு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதுடன் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வழி நடத்த உறுதி கொண்டுள்ளனர். மேலும் குறைந்தபட்சம் 67 சதவீதத்தினர் அடுத்த ஆறு மாத காலத்திற்கு எந்த ஒரு இடத்திற்கும் பயணம் செய்ய வாய்ப்பில்லை என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
18-மே-202007:37:48 IST Report Abuse
தமிழ் இதே வெறும் 40000 பேர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்திவிட்டு ஊரடங்கு முன்கூட்டியே அறிவித்ததற்கு மக்கள் அமோகம் ஆதரவு என்று புருடா விட்டார்கள்.அவர்கள் என்ன 130 கோடி மக்களிடம் கருத்துக்கணிப்பு எடுத்தார்களா என்ன. அதைவிட இது எவ்வளவோ மேல்.
Rate this:
Cancel
18-மே-202007:24:49 IST Report Abuse
ஆப்பு வீடியோ கான்ஃபரன்ஸ் போட்டு வேலை செஞ்சவங்களை கேள்வி கேட்டீங்களா? முடிவுகள் வேற மாதிரி வந்திருக்குமே...
Rate this:
Cancel
Sapare Aude -  ( Posted via: Dinamalar Android App )
18-மே-202006:49:34 IST Report Abuse
Sapare Aude இந்த கொரோனா பரவியதிலிருந்து அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் குழந்தைகளே. மூன்று மாதங்களாக வீட்டிலேயே அடைபட்டு வெளியே சென்று தங்கள் வயதினருடன் கலந்து விளையாட முடியாமல் இருப்பது அவர்கள் மன நிலையை பாதித்துள்ளது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X