ஆந்திராவில் புதிதாக 25 பேருக்கு கொரோனா

Updated : மே 17, 2020 | Added : மே 17, 2020
Share
Advertisement

அமராவதி : ஆந்திராவில் கொரோனா வைரசின் பாதிப்புகளால் புதிதாக 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக அம்மாநில சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.



latest tamil news



கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்கிறது. ஆந்திராவில் கொரோனா பாதிப்பு 2000 ஐ தாண்டி செல்கிறது. இது தொடர்பாக இன்று (மே.,17) அம்மாநில சுகாதாரதுறை தெரிவித்ததாவது : ஆந்திராவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து புதிதாக 25 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. இதனால் மாநிலத்தில் மொத்த கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 2,380 ஆக அதிகரித்தது. ஆ்நதிராவில் பலியானவர்களின் எண்ணிக்கையும் சற்று அதிகரித்து 50 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதித்தவர்களில் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் 7 பேர், சித்தூர் மற்றும் குண்டூரில் தலா 4 பேர் , விசாகப்பட்டினம், பிரகாசம் மற்றும் கர்னூலில் தலா 3 பேர் மற்றும் நெல்லூரில் ஒருவர் என பாதிக்கப்பட்டவர்களின் விபரங்கள் தெரிய வந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் பாதிக்கப்பட்டவர்களில் 5 பேர் சென்னை கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் உள்ளவர்களுடன் தொடர்புடையவர்கள் என தெரிய வந்துள்ளது. மேலும், மொத்த பாதிப்புகளில் 150 பேர் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள். கிருஷ்ணா மாவட்டத்திலும் புதிதாக ஒரு மரணம் பதிவாகியது.


latest tamil news



கடந்த 24 மணிநேரத்தில் 9,880 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, 103 பேர் குணமடைந்தனர். பல்வேறு மருத்துவமனைகளில் இருந்து 1,433 பேர் நோய் தொற்றில் இருந்து குணமடைந்தனர். மாநிலத்தில் 747 பேர் கொரோனாவிற்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X