பொது செய்தி

இந்தியா

பிஹார் வந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் 560 பேருக்கு கொரோனா

Updated : மே 17, 2020 | Added : மே 17, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

பாட்னா: கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கின் காரணமாக, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு ரயில்கள், பஸ்கள் மூலமாக கிளம்பியுள்ளனர். முடியாத சூழலில் பல பேர் நடந்தே செல்லவும் துணிகின்றனர்.



latest tamil news



இந்நிலையில் பிஹார் மாநிலத்தி்ற்கு வந்து சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்களில் பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட தொழிலாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை கூறியதாவது, ' பிஹார் மாநிலத்திற்கு இதுவரை 10,385 புலம்பெயர் தொழிலாளர்கள் வெவ்வேறு மாநிலங்களிலிருந்து வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதுவரை 560 பேரிடம் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 170 பேர் டில்லியிலிருந்தும், 123 பேர் மஹாராஷ்டிராவிலிருந்தும் 26 பேர் மேற்கு வஙகத்திலிருந்தும் வந்துள்ளனர்.' இவ்வாறு மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


latest tamil news



பிஹாரில் இதுவரை மொத்தம் 1,179 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர். 7 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
18-மே-202007:23:02 IST Report Abuse
ஆப்பு அந்தக்காலத்தில் எங்க ஆயா கூட செத்தாலும் சொந்த ஊரில் சாகணும்னு போயிருச்சு. புலம் பெயர்ந்தவர்களும் அதேயேதான் நினைக்கிறாங்களோ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X