சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மதுக்கடைகளில் முடிகிறது; கோவில்களில் முடியாதா?

Added : மே 17, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement

'சமூக இடைவெளியை, மது வாங்குவோரே பின்பற்றும் போது, பக்தர்களாலும் முடியும். எனவே, கோவில்களில் சுவாமி தரிசனத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும்' என, அரசுக்கு ஆன்மிகவாதிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஊரடங்கு காரணமாக, கோவில்களில் சுவாமி தரிசனம் செய்ய, பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும், கோவில்களில் நடக்க இருந்த விழாக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால், பக்தர்கள் பெரும் வருத்தமடைந்தனர். அவர்களுக்கு ஆறுதலாக, முக்கிய கோவில்களில் நடக்கும் தினசரி பூஜைகள் மற்றும் சிறப்பு பூஜைகள் மட்டும், 'ஆன்-லைன்' வாயிலாக ஒளிபரப்பு செய்யப்பட்டன. தற்போது, ஊரடங்கின் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. சமீபத்தில், 'குடி'மகன்கள் வசதிக்காக, 'டாஸ்மாக்' கடைகள் திறக்கப்பட்டு, தினமும், 500 பேருக்கு, சமூக இடைவெளியுடன், மது பானங்கள் விற்பனை செய்ய, அரசு அனுமதி அளித்து உள்ளது.

இந்நிலையில், கோவில்களிலும், சுவாமி தரிசனத்திற்கு பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.இது குறித்து, ஆன்மிகவாதிகள் தரப்பில் கூறியதாவது: 'குடி'மகன்கள் விஷயத்தில் காட்டும் ஆர்வத்தை, பக்தர்கள் விஷயத்திலும், அரசு காட்ட வேண்டும். 'டாஸ்மாக்' போலவே, கோவில்களிலும் காணிக்கை, நன்கொடை வாயிலாக, வருமானம் வருகிறது என்பதை, மறந்துவிடக் கூடாது.டாஸ்மாக்கில், 'டோக்கன்' முறையில், மது பானங்கள் வழங்குவது போல, கோவில்களிலும், டோக்கன் முறையில், தரிசனத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும்.

'குடி'மகன்களே சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும்போது, பக்தர்கள் கடைப்பிடிக்க மாட்டார்களா!எனவே, கோவில்களில் தரிசனத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N Srinivasan - Chennai,இந்தியா
18-மே-202010:32:22 IST Report Abuse
N Srinivasan என் முடியாது? பெரிய கோவில்களில் ஆன்லைன்புக்கிங் கொண்டு வாருங்கள். தர்மம் அல்லது பிரீ தர்ஷன் வேண்டாம். பக்தர்கள் தங்களுக்கு வேண்டிய தேதி டைம் புக் பண்ணிகொள்ளட்டும். சிறிய கோவில்களில் வரிசை முறையை கண்டிப்பாக கடை பிடிக்க செய்ய வேண்டும் குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் யாரையும் கோவில் உள்ளே இருக்க அனுமதிக்கக்கூடாது உட்கார கூடாது போன்ற வழி முறைகைளை கொண்டு வாருங்கள்
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
18-மே-202006:54:04 IST Report Abuse
 ஜெய்ஹிந்த்புரம் பக்தி வெள்ளம் கரைபுரண்டோடும்.
Rate this:
வாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்
18-மே-202012:41:04 IST Report Abuse
வாய்மையே வெல்லும்இப்படியே பெனாத்திக்கினே இருங்க.. இந்த ஜன்மத்துக்கு நீங்க மெக்கா மதினா ல கால் வைக்க முடியாது.. கொரோனாவின் சாபம் உங்களை விடாது...
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
18-மே-202006:24:45 IST Report Abuse
 ஜெய்ஹிந்த்புரம் // கோவில்களிலும் காணிக்கை, நன்கொடை வாயிலாக, வருமானம் வருகிறது என்பதை, மறந்துவிடக் கூடாது // - ஆன்லைன் உண்டியல் தொறங்க சாமி.. டிஜிட்டல் சாமி, டிஜிட்டல் உண்டியல்.. ஹா ஹா..
Rate this:
வாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்
18-மே-202012:39:53 IST Report Abuse
வாய்மையே வெல்லும்உங்களுக்கு மட்டும் தான் பக்தி என எழுதப்பட்டு உள்ளதா.. அசிங்கமாக விமர்சிக்கவேண்டாம் .. உங்க ஜமாஅத்துல் வேணும்னா ஆன்லைன் உண்டியல் வைத்து கொள்ளுங்கள் எங்களுக்கு உங்க ஐடியா தேவை இல்லை.. ஓரமா ஒதுங்கி போகவும்.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X