சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மத்திய அரசின் சலுகைகள் கிடைக்க கூட்டுக்குழு: வணிகர்கள் கோரிக்கை

Added : மே 17, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

சென்னை : மத்திய அரசின் சலுகை திட்டங்கள், பயனாளிகளுக்கு எளிதில் கிடைக்க, கூட்டுக்குழு அமைக்கும்படி, தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பு, கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக, பேரமைப்பின் தலைவர், ஏ.எம்.விக்கிரமராஜா விடுத்துள்ள அறிக்கை: பெரிய வணிக நிறுவனங்கள், தங்கள் கடைகளைத் திறந்து, இருப்பு வைத்துள்ள பொருட்களை சுத்தம் செய்வதுடன், பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும், தமிழக அரசு அனுமதிக்க வேண்டும். போக்குவரத்து முடக்கத்தை நீக்குவதுடன், வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள், சுற்றுலா துறை சார்ந்த கட்டடங்களுக்கு, சொத்து வரியை, ஓராண்டு ரத்து செய்ய வேண்டும்.மத்திய அரசு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு, சலுகை திட்டங்களை அறிவித்துள்ளது.

அவை, பயானளிகளுக்கு எளிதில் கிடைக்க, அதிகாரிகள், வணிகர் பிரதிநிதிகளை இணைத்து, கூட்டுக்குழு அமைக்க வேண்டும்.பணப் புழக்கத்தை அதிகரிக்க, மத்திய அரசு, சாலையோர வணிகர்களுக்கு அறிவித்துள்ள திட்டங்களுக்கான நிதி, நேரடியாக அவர்களை சென்றடைய, அதை, வங்கி கணக்கில் செலுத்த வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
19-மே-202003:55:32 IST Report Abuse
skv srinivasankrishnaveni ஒரு ஊருலே தான் போலீஸ்கர அதிகாரியே செய்தான் உதவி அதிகார துஷ்பியோகம்னால் பலநடைபாதைவியாபாரிகளின் வயத்துல அடிச்சான் அரசு என்ன செய்தது அந்த ஆபீரை ?????????பாவம் வசதிகளே இல்லேன்னுதான் தெருவிலே கடைபோட்டு விக்கிறாங்க . ஒண்ணாந்தேதி கைநிறைய பல ஆயிரங்கள் வாங்கும் இந்த அதிகாரிக்கு எதனால் மனித நேசம் மறைந்துபோனது??????? திமுக சரி அதிமுக சரி ஏழைகளை ஜஸ்ட் வூட்டுக்கே தான் மதிப்பாங்க ஜெயிச்சால் வாழ்த்திட்டுபோயின்னே இருப்பானுக தோற்றால் அந்தஅவச்சுருக்கானுகளே குண்டர் படைகளை அவளை வித்துகுடிசைகளை இருப்பாங்க சீ என்று இருக்கு நல்லாட்ச்சிகூட வாய்க்க வழியே இல்லாமல் இந்த ரெண்டுமே மாறிமாறி வந்து மக்களை ஏமாத்துறானுக தங்களை செழிக்கவச்சுக்கறானுக கூடவே இதுகலின்க்கைத்தடிகளையும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X