ஜனாதிபதி மாளிகையில் பணியாற்றும் போலீஸ் அதிகாரிக்கு கொரோனா

Updated : மே 17, 2020 | Added : மே 17, 2020
Share
Advertisement
Rashtrapati Bhavan, Police officer, corona

புதுடில்லி: ஜனாதிபதி மாளிகையான ராஷ்டிபதி பவனில் பணியாற்றும் போலீஸ் உயரதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. 3 முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், 4வது முறையாக மே 31ம் தேதி வரை பல தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் டில்லி ராஷ்டிரபதி பவனில் பணியாற்றும் உதவி போலீஸ் கமிஷனருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடன் பணியாற்றிய போலீசார், ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.


latest tamil news



ஜனாதிபதி மாளிகையில் பணியாற்றுபவருக்கு முதன்முறையாக கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, ராஷ்டிரபதி பவனில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பாதிப்புக்குள்ளான போலீஸ் அதிகாரி, ஜனாதிபதி மாளிகையின் முகப்பு கட்டடத்தில் பணியாற்றுவதாகவும், அங்கிருந்து ஜனாதிபதி மாளிகை தூரமாக உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X