அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஒரு நாள் கட்டணம் போதும்: துணை முதல்வர் உத்தரவு

Updated : மே 19, 2020 | Added : மே 17, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
 ஒரு நாள், கட்டணம்,போதும் , துணை முதல்வர்,உத்தரவு

சென்னை : சென்னை, கோயம்பேடு பஸ் நிலையத்தில், வாகனங்களை விட்டு சென்றவர்களிடம், ஒரு நாள் கட்டணத்தை மட்டும் வசூலிக்கும்படி, துணை முதல்வர், பன்னீர்செல்வம்உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா பாதிப்பு காரணமாக, மார்ச், 24ல் ஊரடங்கு அமலானது. அன்று, சென்னையில் இருந்து, சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள், தங்கள் வாகனங்களை, சென்னை, கோயம்பேடில் உள்ள, எம்.ஜி.ஆர்., பஸ் நிலையத்தின், வாகன நிறுத்துமிடத்தில் விட்டுச் சென்றனர்.இதன்படி, 145 நான்கு சக்கர வாகனங்களும், 1,359 இரு சக்கர வாகனங்களும் விட்டுச் செல்லப்பட்டன. தற்போது வாகனங்களை, திரும்ப எடுக்க வருவோரிடம், 55 நாட்களுக்கு, முழு நேர வாடகை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இதை அறிந்த துணை முதல்வர் பன்னீர்செல்வம், எந்த வாகனமாக இருந்தாலும், அவற்றுக்கு ஒரு நாள் கட்டணம் மட்டும் வசூலிக்க வேண்டும் என, அறிவுறுத்தினார். அதை ஏற்று, சென்னை பெருநகர வளர்ச்சி குழும அதிகாரிகள், கடிதம் வழியே, ஒப்பந்ததாரருக்கு உத்தரவிட்டுள்ளனர். நான்கு சக்கர வாகனங்களுக்கு, ஒரு நாள் கட்டணமாக, 50 ரூபாய்; இரு சக்கர வாகனங்களுக்கு, 40 ரூபாய்; சைக்கிளுக்கு, 15 ரூபாய் மட்டும் கட்டணம் செலுத்தி, பொதுமக்கள் தங்கள் வாகனங்களை எடுத்து கொள்ளலாம்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JIVAN - Cuddalore District,இந்தியா
19-மே-202011:25:36 IST Report Abuse
JIVAN மிகவும் சிறப்பான நடவடிக்கை, அதேபோன்று தனியார் இடத்தில் வாகனம் நிறுத்தியவர்களுக்கும் குறைந்த பட்ச தொகை அரசே நிர்ணயித்து சொல்லலாம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Rate this:
Cancel
Sundararaman Iyer - Bangalore,இந்தியா
19-மே-202004:41:47 IST Report Abuse
Sundararaman Iyer சிங்கப்பூரில் இலவசம் என்று யார் சொன்னார்கள்? அங்கு காரின் விலையை விட ரோடு வரி அதிகம் - ஆகவே கார் வாங்க மக்கள் தயங்குவார்கள்.
Rate this:
Cancel
Paramasivam - Chennai,இந்தியா
18-மே-202006:59:07 IST Report Abuse
Paramasivam இதுதான் சரியான முடிவு. இலவசம் எந்தவொரு வகையிலும் நல்லதல்ல.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X