10 லட்சம் வேலைவாய்ப்பு, ரூ.50 ஆயிரம் கோடி இழப்பு: அமரீந்தர் சிங்

Updated : மே 17, 2020 | Added : மே 17, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement

தற்போது நடைபெற்று வரும் கொரோனா தடுப்பு ஊரடங்கால் பஞ்சாப் அரசுக்கு ரூ .50,000 கோடி "குறைந்தபட்ச இழப்பு" மற்றும் 10 லட்சம் வேலைவாய்ப்பு இழப்பு ஏற்பட்டுள்ளதாக முதல்வர் அமரீந்தர் சிங் கூறினார்.latest tamil newsஇது குறித்து அவர் கூறியதாவது: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஏற்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால், ஒவ்வொரு மாதமும் ரூ .3 ஆயிரம் கோடியை அரசு இழந்து வருகிறது. அரசின் வருவாய்க்காக விரிவிதிப்பு குறித்து சில கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.
ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் கொரோனா வைரஸ் தொற்று உச்சநிலையில் இருக்கும் என்று சில நிபுணர்களுடன் கணித்த முதல்வர், பஞ்சாப் தன்னை "மிக மோசமான நிலைக்கு" தயார்படுத்திக் கொண்டிருக்கிறது, வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்கள் மற்றும் வேறு மாநிலத்திருந்து தம் ஊருக்கு திரும்பி வருபவர்கள் அதிக அளவில் நோய் மேலாண்மை சவாலாக உருவாகி வருகின்றனர்.ஊரடங்கால் "ஏப்ரல் மாதத்தில் மட்டும், வருவாயில் 88 சதவீதத்தை இழந்தோம்.


latest tamil newsநிதி நிலைமை "மிகவும் சிக்கலானது" என்று குறிப்பிட்ட அவர், ஏற்கனவே அனைத்து 'அத்தியாவசியமற்ற' துறைகளையும் செலவினங்களைக் குறைத்து அவற்றின் செலவுகளை நியாயமான முறையில் நிர்வகிக்குமாறு கேட்டுக் கொண்டதாகவும் ஆனால், அது போதுமான தாக இல்லை, எனவே நாங்கள் சில கடுமையான புதிய வரிவிதிப்பு முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும் என்றும் பேச்சுவார்த்தை நடந்துவருவதாகவும்அடுத்த இரண்டு நாட்களில் ஒரு முடிவை எடுப்போம் என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
thamodaran chinnasamy - chennai,இந்தியா
18-மே-202009:38:23 IST Report Abuse
thamodaran chinnasamy இவர் சொல்லுவதை அப்படியே உல்டாவா சிந்தித்து பாருங்களேன். அப்ப மற்ற நேரங்களில் இவர்கள் எதுவுமே கிழிக்கவில்லை என்பதை தானே ஒப்புக்கொள்ளுகிறார் . மற்ற நேரங்களில் சரியாக பணி செய்திருந்தால் இது போன்ற நேரங்களில் அதை JUST LIKE THAT சமாளிக்கும் திறமை வந்துஇருக்குமே .
Rate this:
Cancel
18-மே-202006:01:54 IST Report Abuse
ஆப்பு இவுரு ஒரு சுத்து பூசுனாப் போல இருக்காரே... ரொம்ப வேலை செஞ்சுட்டாரோ?
Rate this:
Cancel
Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
17-மே-202023:13:24 IST Report Abuse
Janarthanan நாங்கள் சில கடுமையான புதிய வரிவிதிப்பு முடிவுகளை எடுக்க வேண்டும் இருக்கும் - ராஜமாதா எல்லாம் செலவையும் ஏற்று கொள்ளுவார்கள் வரி எல்லாம் ஏற்ற விட மாட்டார்கள் ??? என்னடா அடிமைகளா கரீக்டா???
Rate this:
18-மே-202006:56:36 IST Report Abuse
தமிழ் ஆமாண்டா ஊரடங்கு போடுறது நீங்க, கட்டணம் அவங்க தரணுமா. அதையும் நீங்க குடுத்ததா கணக்கு காட்டிடுங்க....
Rate this:
Raman Muthuswamy - Bangalore,இந்தியா
18-மே-202010:11:20 IST Report Abuse
Raman Muthuswamyஉண்மையை புட்டு புட்டு ஒரு முதல்வர் வெச்சா அதிலும் குற்றம் .. இதையே நமது வாழப்படியார் செய்தால் கரம் கூப்புவீர்கள் என்ன நியாயம் .. என்ன தர்மம் ?? காமாலைக்கண்கள் .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X