அம்பான் புயலால் அதிகரிக்கும் வெயில்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'அம்பான்' புயலால் அதிகரிக்கும் வெயில்

Added : மே 17, 2020
Share
சென்னை : 'அம்பான் புயல் காரணமாக, மத்திய மற்றும் வட மாவட்டங்களில், 42 டிகிரி செல்ஷியஸ் வரை வெயில் அதிகரிக்கும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து, வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது: வங்கக் கடலில் உருவாகியுள்ள, 'அம்பான்' புயல், சென்னைக்கு கிழக்கில், வங்கக் கடலின் மத்திய பகுதியில் சுழல்கிறது. இது, வடக்கு நோக்கி நகர்ந்து, விசாகப்பட்டினத்தை

சென்னை : 'அம்பான் புயல் காரணமாக, மத்திய மற்றும் வட மாவட்டங்களில், 42 டிகிரி செல்ஷியஸ் வரை வெயில் அதிகரிக்கும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது: வங்கக் கடலில் உருவாகியுள்ள, 'அம்பான்' புயல், சென்னைக்கு கிழக்கில், வங்கக் கடலின் மத்திய பகுதியில் சுழல்கிறது. இது, வடக்கு நோக்கி நகர்ந்து, விசாகப்பட்டினத்தை ஒட்டி செல்லும் என, எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று, தீவிர புயலாக சுழன்ற நிலையில், இன்று அதிதீவிர புயலாக, அம்பான் வலுப்பெறும். பின், ஒடிசா மாநிலம், புவனேஸ்வர் மற்றும் மேற்கு வங்கம் இடையில், வரும், 20ம் தேதி கரையை கடக்கும் என, தெரிகிறது.புயல் காரணமாக, வங்க கடலின் தெற்கு, வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில், மணிக்கு, 200 கி.மீ., வேகம் வரை சூறாவளி காற்று வீசும்.அலைகள் கொந்தளிப்பாக காணப்படும்; பல அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழும். அதனால், மீனவர்கள், மூன்று நாட்களுக்கு, இந்த பகுதிகளுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வெயில் எச்சரிக்கைபுயல் காரணமாக, நிலப் பகுதிக்குள் ஈரப்பதம் மிகுந்த கடற்காற்று வருவது தடைபட்டுள்ளது.

மேலும், காற்றின் ஈரப்பதம், புயலால் உறிஞ்சப்படுவதால், வெப்பத்தின் அளவு அதிகரித்து உள்ளது. இதனால், தமிழகத்தின், மத்திய மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில், இன்றும், நாளையும், 42 டிகிரி செல்ஷியஸ் வெயில் காணப்படும்.

லேசான மழை உண்டு : கோவை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், தேனி, நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலுார், தஞ்சை, திருவாரூர், நாகை, திருநெல்வேலி, துாத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில், சில இடங்களில் இடியுடன், இன்று மழை பெய்யும்.நேற்று, ராமநாதபுரத்தில், 3; திண்டுக்கல்லில், 2 செ.மீ., மழை பெய்து உள்ளது. இவ்வாறு, அந்த மையம் கூறியுள்ளது.புயல் முன்னெச்சரிக்கையாக, சென்னை, கடலுார், நாகை துறைமுகங்களில், நான்கு மற்றும் ஐந்தாம் எண் கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.

எண்ணுார், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், துாத்துக்குடியில், இரண்டாம் எண் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.பாம்பனில் 2ம் எண் புயல் கூண்டுவங்க கடலில் உருவாகிய, 'அம்பான்' புயல், ஒடிசா பாரதீப் துறைமுகம் தெற்கில், 1,040 கி.மீ.,லும், மேற்கு வங்கம் திகா துறைமுகம் தெற்கில், 1,200 கி.மீ.,லும், வங்கதேசம் கேபுப்பரா துறைமுகம் தென்மேற்கில், 1,300 கி.மீ., துாரத்திலும் மையம் கொண்டுள்ளது.இதனால், நேற்று பாம்பன் துறைமுகம் அலுவலகத்தில், 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X