ஸ்பெயினில் 2 மாதங்களில் குறைந்தது பலி

Updated : மே 17, 2020 | Added : மே 17, 2020
Share
Advertisement

மாட்ரிட் : கொரோனா பாதிப்புகளால் கடந்த 24 மணிநேரத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 100 க்கும் குறைவாக பதிவானதாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்தது.



latest tamil news




கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளிலும் தொடர்ந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றன. பல நாடுகளிலும் நோய் பரவுதலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. உலக அளவில் பாதிப்பு அதிகமான நாடுகளில் அமெரிக்கா முன்னிலையில் உள்ளது. நோய் அதிகரிக்கும் நாடுகளின் பட்டியலில் ஸ்பெயின் 3 வது இடத்தில் உள்ளது. ஸ்பெயினில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 87 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,31,698 ஆக அதிகரித்துள்ளது. இரண்டு மாதங்களில் இல்லாத அளவிற்கு பலி எண்ணிக்கை 100 க்கு குறைவாக உள்ளது.


latest tamil news



கொரோனா ஊரடங்கால் ஸ்பெயினில் விதிமுறைகளை தளர்த்த ஒரு நாள் முன்னதாக இந்த அறிவிப்பு வெளியானது. ஆனால் இது மாட்ரிட் மற்றும் பார்சிலோனாவில் அல்ல. இதை தொடர்ந்து அந்நாட்டில் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 27,650 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 2 மாதங்களில் ஸ்பெயினில் பலி எண்ணிக்கை இதுவே மிகவும் குறைவாகும். ஏப்., துவக்கத்தில் ஒரே நாளில் 950 பேர் வரை பலியானது குறிப்பிடத்தக்கது. இதுவரை உறுதி செய்யப்பட்ட பாதிப்புகளின் எண்ணிக்கை 2,31,000 க்கு அதிகமாக இருந்தது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X