பொது செய்தி

இந்தியா

செய்தி சில வரிகளில்...

Added : மே 17, 2020
Share
Advertisement

நாய், பூனை கறி வேண்டாமே!குவஹாத்தி: அரசு சாரா விலங்குகள் நல தன்னார்வ அமைப்புகள் சில, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனுக்கு கூட்டாக கடிதம் எழுதியுள்ளன. அதில், 'நாட்டின் சில பகுதிகளில், நாய், பூனைகள் கறிக்காக கொல்லப்படுகின்றன. மற்றப் பகுதிகளுக்கு இவை எடுத்துச் செல்லப்படுவதால், தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. அதனால், இந்த இறைச்சிகள் விற்பனைக்கு முழு தடை விதிக்க வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.

சிறுமியர், 'ஆணவ' கொலைஇஸ்லாமாபாத்: நம் அண்டை நாடான பாகிஸ்தானின் கைபர் - பக்துங்காவா மாகாணத்தில், ஒரு ஆணுடன், இரண்டு சிறுமியர் பேசியது தொடர்பான, 'வீடியோ' வெளியானது. அதையடுத்து, 16 மற்றும் 18 வயதுடைய அந்தச் சிறுமியரை, அவர்களுடைய உறவினர் கொலை செய்துள்ளார். தலைமறைவாக உள்ள அவரை, போலீசார் தேடி வருகின்றனர். அந்த வீடியோவில் இருந்த ஆண் மற்றும் மற்றொரு சிறுமியையும் காணவில்லை; அவர்களுடைய நிலை குறித்த தகவல் இல்லை.முகாமில், 7 பேர் பாதிப்பு ஜோத்பூர்: பாக்.,கில் இருந்து திரும்பி வந்துள்ள, நம் நாட்டைச் சேர்ந்த, 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புலம் பெயர்ந்தோர், ராஜஸ்தானின் ஜோத்பூர் முகாமில் வசிக்கின்றனர்.

மிக நெரிசலான பகுதியில் வசிப்பதால், சமூக விலகலை பின்பற்ற முடியாமல் தவிக்கும் நிலையில், அவர்களில் ஏழு பேர், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அனாதையாக நோயாளி உடல்ஆமதாபாத்: குஜராத்தின் ஆமதாபாத் நகரைச் சேர்ந்த, ௬௭ வயது நபருக்கு, மே, 13ல் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில், சிகிச்சையில் இருந்த முதியவர், அங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் அனாதையாக இறந்து கிடந்தார். அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், இதற்கு மருத்துவமனை ஊழியர்களை குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்தி, 24 மணி நேரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய, முதல்வர், விஜய் ரூபானி உத்தரவிட்டுள்ளார். 'டிவி' நடிகர் தற்கொலை மும்பை : பஞ்சாபில் இருந்து மஹாராஷ்டிரா வந்த, மன்மீத் க்ரூவால், 32, பல்வேறு 'டிவி' நிகழ்ச்சிகளில் நடித்து வந்தார். மும்பையின் கார்கர் பகுதியில், மனைவியுடன் வசித்து வந்த இவர், கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, கொரோனா ஊரடங்கால் வருமானமின்றி தவித்த அவர், நேற்று முன் தினம் இரவு, வீட்டில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். நிலச்சரிவில் உடல் மீட்புஜம்மு: ஜம்மு - -காஷ்மீரின் ரம்பன் மாவட்டத்தில், ஜம்மு - -ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை பணிகள் நடைபெறும், சீரி பகுதியில், நேற்று முன்தினம் மாலை நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் மூன்று பேர் பலியான நிலையில், ஒருவர் உடல் மீட்கப்பட்டது. நேற்று நடந்த மீட்புப் பணியில், ௨௫ வயது வாலிபர் உடல் மீட்கப்பட்டது. காயங்களுடன் மீட்கப்பட்ட எட்டு பேர், மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டனர். மேலும் ஒருவரின் உடலை தேடி வருகின்றனர்.

இந்தியாவுக்கு நேபாளம் நன்றிகாத்மாண்டு: 'கொரோனா' வைரஸ் பரவலுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு தேவையான, சில மருந்துகள், மருத்துவப் பொருட்கள், பரிசோதனை கருவிகளை பரிசாக அளித்ததற்காக, இந்தியாவுக்கு, நம் அண்டை நாடான நேபாளம் நன்றி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சர் பிரதீப் கயாவாலி, சமூக வலைதளத்தில் செய்தி வெளியிட்டுள்ளார்.

முக கவசம் கட்டுப்பாடு நீக்கம்பீஜிங்: 'சாலைகள் உட்பட வெளிப்புறங்களில் செல்லும்போது, முக கவசம் அணிவது கட்டாயமில்லை' என, சீனா அரசு புதிய விலக்கு அளித்துள்ளது. கடந்த சில மாதங்களாக, முககவசம் அணிவது கட்டாயமாக இருந்து வந்தது. 'நல்ல சீதோஷ்ண நிலை இருக்கும்போது, பொது இடங்களில் உடற்பயிற்சிகளை செய்யலாம்' என, சீன அரசின் புதிய அறிவிப்புகள் தெரிவிக்கின்றன.-------------குண்டு வீச்சில், 7 பேர் பலிகெய்ரோ : வடக்கு ஆப்ரிக்க நாடான கெய்ரோவில், உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இந்த நிலையில் பிரிவினைவாத அமைப்புகள், தலைநகர் திரிபோரியில் உள்ள அகதிகள் முகாம் மீது, குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில், வங்கதேசத்தை சேர்ந்த, 52 வயது நபர், அவருடைய, ௫ வயது குழந்தை உள்பட, ஏழு பேர் உயிரிழந்தனர்; 17 பேர் காயமடைந்தனர்.-----------தடுப்பூசி மையம் திறப்புலண்டன் : ஐரோப்பிய நாடான பிரிட்டனில், கொரோனா வைரஸ் உள்ளிட்டவற்றுக்கான தடுப்பூசி தயாரிக்கும் புதிய ஆலை துவங்கப்பட உள்ளது. மொத்தம், 854 கோடி ரூபாயில் இது அமைய உள்ளதாக, இந்தியாவை பூர்வீகமாக கொண்ட, நாட்டின் வர்த்தகத் துறை அமைச்சர், அலோக் சர்மா அறிவித்தார். அடுத்த, ஆறு மாதங்களில், இது உற்பத்தியை துவக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X