பொது செய்தி

தமிழ்நாடு

சவுதியில் தவிக்கும் கடலூர்  தொழிலாளர்கள்

Added : மே 17, 2020
Share
Advertisement

கடலுார்: சவுதி அரேபியாவில் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, நம்ம தான் கடலுார் அமைப்பு மனு அளித்துள்ளது.இதுகுறித்து கலெக்டர் அலுவலகத்திற்கு நம்ம தான் கடலுார் சமூக சேவை அமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் அனுப்பியுள்ள மனு:சவுதி அரேபியா நாட்டில் 100க்கும் மேற்பட்ட கடலுார் மாவட்ட தொழிலாளர்கள் உணவின்றியும், தங்குவதற்கு இடமின்றியும் தவிக்கின்றனர். இதுகுறித்து மத்திய அரசுக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு பதட்டமும், மன உளைச்சலும் ஏற்பட்டுள்ளது. எனவே, சவுதி அரேபியாவில் சிக்கி தவிக்கும் மாவட்ட தொழிலாளர்களை மீட்டு இந்தியா அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X