சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'பாஸ்டேக்' வழியில் பயணித்தால் அபராதம்

Added : மே 17, 2020
Share
Advertisement

சென்னை : சுங்கச் சாவடிகளை கடக்க கைவசம், 'பாஸ்டேக்' இல்லாமல், அதற்காக ஒதுக்கப்பட்ட வழிகளில் பயணிக்கும் வாகனங்களிடம், இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்க, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களிடம், மின்னணு முறையில் கட்டணம் வசூலிக்கும், 'பாஸ்டேக்' நடைமுறை, 2019 டிச., 15 முதல் நடைமுறைக்கு வந்தது. தமிழகத்தின், 48 சுங்கச் சாவடிகளிலும், இது செயல்பாட்டில் உள்ளது. பாஸ்டேக் இல்லாத வாகனங்கள், பணம் செலுத்துவதற்காக, அனைத்து சுங்கச்சாவடிகளிலும், ஒரு வழி ஒதுக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக, சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது;

மீண்டும், கட்டண வசூலிப்பு, ஏப்., 20ம் தேதி துவங்கியது.பாஸ்டேக் வழிகளில், மற்ற வாகனங்களும் பயணித்து வருகின்றன. இதனால், பாஸ்டேக் வைத்துள்ளவர்கள், தேவையின்றி காத்திருப்பதால், அவர்களின் நேரம் விரையமாகிறது. எனவே, பாஸ்டேக் இல்லாமல், அதற்கான வழிகளில் பயணிக்கும் வாகனங்களிடம், இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்க, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த நடைமுறையை, இன்று முதல் நடைமுறைப்படுத்த, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X