சிங்கப்பூரில் மேலும் 682 பேருக்கு கொரோனா| Dinamalar

சிங்கப்பூரில் மேலும் 682 பேருக்கு கொரோனா

Updated : மே 17, 2020 | Added : மே 17, 2020
Share

சிங்கப்பூர் : கொரோனா பாதிப்பு அதிகரித்து சிங்கப்பூரில் புதிதாக 682 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்தது.



latest tamil news



கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளிலும் தொடர்ந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றன. சிங்கப்பூரிலும் கொரோனாவிற்கான பாதிப்புகள் தொடர்ந்து கூடிக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் சிங்கப்பூரில் மேலும் 682 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 28,038 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 4 பேர் சிங்கப்பூரையும், மற்றவர்கள் வெளிநாடுகளில் தங்கி பணிபுரியும் தொழிலாளர்கள் (இந்தியர்கள் உள்ளிட்ட) என தெரிய வந்துள்ளது.


latest tamil news



கொரோனா தொற்றால் கடந்த 24 மணிநேரத்தில் முதியவர் ஒருவர் பாதிக்கப்பட்டார். இதையொட்டி, பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 22 ஆக உள்ளது. நோய் தொற்றில் இருந்து 8,342 பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர். கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 1,111 பேர் குணமடைந்தனர். தற்போது நாட்டில் 17,881 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தெற்காசியாவில் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X