பொது செய்தி

தமிழ்நாடு

மேல்அனுவம்பட்டு ஊராட்சியில் பாண்டியன் எம்.எல்.ஏ., நிவாரணம்

Added : மே 17, 2020
Share
Advertisement

புவனகிரி; புவனகிரி ஒன்றியம், மேல்அனுவம்பட்டு ஊராட்சியில் 350 குடும்பங்களுக்கு அ.தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலர் பாண்டியன் எம்.எல்.ஏ,, நிவாரணம் வழங்கினார்.ஊரடங்கால் பாதித்த சிதம்பரம் சட்டசபை தொகுதியில் மக்களுக்கு அ.தி.மு.க., கிழக்கு மாவட்ட கழக செயலர் பாண்டியன் எம்.எல்.ஏ., தன் சொந்த செலவில் நிவாரணம் வழங்கி வருகிறார். மேலமூங்கிலடி ஊராட்சியில் வசிக்கும் 350 குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி, காய்கறிகள் மற்றும் கபசுரக்குடிநீர் வழங்குமு் நிகழ்ச்சி நடந்தது. முன்னாள் அமைச்சர் செல்விராமஜெயம், ஒன்றியசேர்மன் சிவப்பிரகாசம், துணைச்சேர்மன் வாசுதேவன்,கவுன்சிலர் ராமதாஸ், ஆதனுார் ஊராட்சி செயலர் ஜெயசீலன், கவுன்சிலர் லதாராஜேந்திரன் முன்னிலை வகித்தனர்.எம்.எல்.ஏ., பாண்டியன் தலைமை தாங்கி பயனாளிகளுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார். மாவட்ட தொழில் நுட்ப அணி பொருளாளர் சுவாமிநாதன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் செழியன், கூட்டுறவு வங்கித் தலைவர்கள் சரவணன், ஆறுமுகம் ஊராட்சித் தலைவர் தவமணிமருதப்பன், துணைத் தலைவர் கலாஐயாசாமி, பிரகாஷ், மனோகர், கிளை செயலர் பிரேம்குமார், ஊராட்சி செயலர் ராஜேந்திரன், கிளை அவைத் தலைவர் ஐயாசாமி, கட்சி நிர்வாகிகள் பழனிவேல், ரமேஷ்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X