பொது செய்தி

தமிழ்நாடு

வேப்பூரில் தி.மு.க.,வினர் உதவி பொருட்கள் வழங்கல்

Added : மே 17, 2020
Share
Advertisement

வேப்பூர்: வேப்பூர் தி.மு.க., சார்பில் துப்புரவு பணியாளர்களுக்கு கொரோனா உதவி பொருட்கள் வழங்கப்பட்டது.கொரோனா வைரஸ் காரணமாக பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களுக்கு உதவ வேண்டும் என தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தனது கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டார். அதை தொடர்ந்து, தி.மு.க., மேற்கு மாவட்ட செயலர் கணேசன் எம்.எல்.ஏ., அறிவுறுத்தினார்.இதன்பேரில் வேப்பூர் தி.மு.க., சார்பில் கொரோனா உதவி பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு, வேப்பூர் தி.மு.க., கவுன்சிலர் முத்துகண்ணு தலைமை தாங்கினார். தி.மு.க., மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கருப்புசாமி முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர் மோகன்ராஜ் வரவேற்றார்.நல்லூர் தி.மு.க., ஒன்றிய செயலர் பாவாடை கோவிந்தசாமி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, நிவாரண பொருட்கள் வழங்கினார். ஒன்றிய துணை செயலர் மாரிமுத்தாள் குணா, தி.மு.க., நிர்வாகிகள் பிரபு, குணா, அரிசன், விஜய் உட்பட பலர் பங்கேற்றனர்.இதில், வேப்பூர் மற்றும் என்.நாரையூர் ஊராட்சிகளின் துப்புரவு பணியாளர்கள், டேங்க் ஆப்ரேட்டர்கள், ஊனமுற்றோர் உட்பட 100 பேருக்கு, அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள், முக கவசங்கள் வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X