பொது செய்தி

தமிழ்நாடு

விதை ஆய்வு துணை இயக்குனர் சேத்தியாதோப்பில் திடீர் ஆய்வு

Added : மே 17, 2020
Share
Advertisement

சேத்தியாத்தோப்பு; நடப்பு குறுவை சாகுபடிக்கு தரமான விதைநெல் வழங்கப்படுகிறதா என கடலுார்-விழுப்புரம் மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் மல்லிகா, புவனகிரி, குறிஞ்சிப்பாடி வட்டாரங்களில் ஆய்வு செய்தார்.விதை ஆய்வு துணை இயக்குனர் மல்லிகா, புவனகிரி வட்டாரத்தில் உள்ள மிராளுர், வண்டுராயன்பட்டு விதைப்பண்ணைகள் மற்றும் சேத்தியாத்தோப்பில் தனியார் விதை விற்பனை நிலையங்களில் ஆய்வு செய்தார். மேலும், புவனகிரி, குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் விதை சுத்திகரிப்பு நிலையத்தில் இருப்பு வைக்கப்பட்டிருந்த விதைக்குவியல்கள், பகுப்பாய்வு முடிவு அறிக்கைகள், பதிவேடுகள், விதை சுத்திகரிப்பு உபகரணங்கள் போன்றவைகளை ஆய்வு செய்தார். இதில் 242 விதை மாதிரிகள் எடுக்கப்பட்டு தரபகுப்பாய்விற்கு கடலுார் விதை பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். மேலும், விற்பனையாளர் மற்றும் விவசாயிகள் சமூக இடைவெளி, முக கவசம் அணிந்து விதைகளை வாங்கி செல்லுமாறு அறிவுறுத்தினர். கடலுார் விதை ஆய்வாளர் தமிழ்வேல், மிராளூர் வேளாண் விதைப்பண்ணை மேலாளர் வெங்கடேசன் ஆகியோர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X