ராஜஸ்தான், உ.பி., சிறைகளில் கைதிகளுக்கு தொற்று பரிசோதனை

Added : மே 17, 2020
Share
Advertisement

ஜெய்ப்பூர் : கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, ராஜஸ்தான் மற்றும் உத்தர பிரதேச சிறைகளில் உள்ள கைதிகளுக்கு, மருத்துவ பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, மத்திய - மாநில அரசுகள் பல நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. கண்காணிப்புஇதற்கிடையே, ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள சிறைகளில், வைரசால் பாதிக்கப்பட்டுள்ள கைதிகளின் எண்ணிக்கை, 140ஐ கடந்துள்ளது.இது குறித்து சிறைத்துறை டி.ஜி.,ரெட்டி நேற்று கூறியதாவது:மாவட்ட சிறையில், சிறை கண்காணிப்பாளர் மற்றும் 130 கைதிகளுக்கு, வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. மத்திய சிறையில், 12 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதையடுத்து, ஜெய்ப்பூர் மாவட்ட சிறையில் உள்ள அனைத்து கைதிகள் மற்றும் சிறைத் துறை அதிகாரிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கும் பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள இதர சிறைகளிலும், கைதிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்வது குறித்து, உள்துறை அமைச்சக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, அதற்கான முடிவு எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.இதேபோல், உ.பி.,யில் சமீபத்தில் கைதி ஒருவர், வைரஸ் தொற்றால் உயிரிழந்தார். இதையடுத்து, அவருடன் தொடர்பில் இருந்த, 14 கைதிகளும், 13 சிறைத் துறை அதிகாரிகளும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு, மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிறைத்துறை டி.ஜி., ஆனந்த் குமார் கூறியதாவது: உ.பி.,யில், 71 சிறைகள் உள்ளன. இவற்றில், மொத்தம், 94 ஆயிரம் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். கைதிகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில், யோகா பயிற்சி வழங்கப்படுகிறது. பரிசோதனைமுக கவசங்களை கைதிகள் உபயோகிக்கின்றனர். சிறைகளில், கிருமி நாசினி தினமும் தெளிக்கப் படுகிறது. மாநிலம் முழுதும் உள்ள சிறைக் கைதிகளுக்கு, மருத்துவ பரிசோதனை செய்யும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.இவ்வாறு, அவர் கூறினார்.

இந்நிலையில், கைதிகளுக்கு வைரஸ் தொற்று அபாயத்தால், நாடு முழுவதும் பல்வேறு சிறைகளில் நெரிசலை குறைக்கும் வகையில், குறைந்த தண்டனை கால கைதிகள் விடுவிக்கப் பட்டு வருகின்றனர். கொரோனா கைதிக்கு ஜாமின்தற்கொலைக்கு துாண்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட விசாரணைக் கைதிக்கு, கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப் பட்டது. இந்நிலையில், இவ்வழக்கை விசாரித்து வரும் உச்ச நீதிமன்றம், அந்நபருக்கு, இரண்டு மாதம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இரண்டு மாத சிகிச்சைக்குப் பின், சிறைத் துறை அதிகாரிகளிடம் சரணடைய உத்தரவிட்டுள்ளது.

பெண் கைதிக்கு தொற்றுபஞ்சாபின் சண்டிகரில் உள்ள லூதியானா சிறையில், 48 வயது பெண் கைதிக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதைஅடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். போதை மருந்து கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட இவர், கடந்த ஏப்ரல், 28ம் தேதி சிறையில் அடைக்கப்பட்டார். பஞ்சாப் சிறையில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட முதல் கைதி, இவர். கைதிகளால் நீதிபதிக்கு தனிமை ஹரியானாவில் வன்முறைகளில் ஈடுபட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட, இரண்டு விசாரணைக் கைதிகள், வைரசால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, விசாரணைக் கைதிகளின் வழக்கை விசாரித்த நீதிபதி, நீதிமன்ற ஊழியர்கள், காவல் துறை அதிகாரிகள் ஆகியோர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X