பொது செய்தி

தமிழ்நாடு

செருப்பு தைக்கும் தொழிலாளிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க கோரிக்கை

Added : மே 17, 2020
Share
Advertisement

சேத்தியாத்தோப்பு; கொரோனா ஊரடங்கால் பாதிப்பிற்குள்ளான செருப்பு தைக்கும் தொழிலாளர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பில் சுமார் 15க்கும் மேற்பட்டோர் செருப்பு தைக்கும் தொழில் செய்து வருகின்றனர். இந்த தொழிலாளர்களில் பலர் நலவாரியத்தில் பதிவு செய்யாமல் தொழிலை செய்து வருகின்றனர்.கடந்த 24 ஆம் தேதி முதல் தமிழக அரசு கொரோனா முழு ஊரடங்கு காரணமாக சேத்தியாத்தோப்பில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டது. இதில் செருப்பு தைக்கும் தொழிலாளர்களின் கடைகளும் முற்றிலுமாக மூடப்பட்டதை தொடர்ந்து அன்றாட வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வீட்டில் முடங்கியுள்ளனர்.இந்த தொழிலாளர்களில் பலர் தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு இல்லாத நிலையில் நிவாரணம் கிடைக்கவில்லை.இதனால் இவர்களின் வாழ்வாதாரத்தை இழந்து அவதிக்குள்ளாகி வருகின்றனர். தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் தனிக்கவனம் செலுத்தி செருப்பு தைக்கும் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X