அரசியல் செய்தி

தமிழ்நாடு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்

Added : மே 17, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

சென்னை : கொரோனா பாதிப்பு முற்றிலும் ஓய்ந்த பிறகே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்த, மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில், 2019 டிசம்பரில், இரண்டு கட்டங்களாக, ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, நகர்ப்புற தேர்தலை நடத்தும் ஏற்பாடுகளில், மாநில தேர்தல் ஆணையம் கவனம் செலுத்தி வந்தது. இதற்காக, புதிதாக அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில், வார்டு வரையறை உள்ளிட்ட பணிகள் நடந்து வந்தன. தேர்தலை, ஏப்ரல் மற்றும் மே மாதங்களில், பள்ளி, கல்லுாரி விடுமுறை நாட்களில் நடத்தவும் திட்டமிடப்பட்டு இருந்தது. கொரோனா ஊரடங்கால், தேர்தல் பணிகள்முடங்கியுள்ளன.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அதிகாரிகள், அலுவலர்கள், கொரோனா தடுப்பு பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர். இப்பணிகள் முடிய, மூன்று மாதங்களாகும் வாய்ப்புள்ளது. எனவே, கொரோனா பாதிப்பு முற்றிலும் ஓய்ந்த பிறகே, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த, மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. அதனால், ஆகஸ்ட்டுக்கு பின், தேர்தல் நடத்துவதற்கு வாய்ப்பு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
VTR - Chennai,இந்தியா
18-மே-202008:51:59 IST Report Abuse
VTR Nature to their rescue
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X