செய்தி சில வரிகளில்

Added : மே 17, 2020
Share
Advertisement

ஐ.நா., பொதுச் செயலர் கவலைநியூயார்க்: சர்வதேச ஓரினச் சேர்க்கையாளர் உரிமை தினத்தையொட்டி, ஐ.நா., பொதுச் செயலர், ஆன்டோனியோ குட்டரெஸ் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:கொரோனா வைரஸ் மற்றும் ஊரடங்கு காலத்தை பயன்படுத்தி, ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு எதிராக, போலீஸ் உள்ளிட்டோர் செயல்படும் அபாயம் உள்ளது. அது தடுக்கப்பட்டு, அவர்களை பாதுகாக்க வேண்டும்.

அவர்களை பிரித்து பார்க்காமல், கவுரவத்துடன் வாழவும், உரிமையை பெறுவதற்கும், அனைத்து தரப்பினரும் உதவ வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.ஸ்பெயினில் ஊரடங்கு நீட்டிப்பு?மேட்ரிட்: 'கொரோனா' வைரஸ் பாதிப்பை அடுத்து, ஐரோப்பிய நாடான ஸ்பெயினில், மார்ச், 14ல் இருந்து ஊரடங்கு அமலில் உள்ளது. வரும், 24ம் தேதியுடன் இது முடிவடைய உள்ள நிலையில், நேற்று மட்டும் அங்கு, 102 பேர் உயிரிழந்தனர். பலி எண்ணிக்கை, 27 ஆயிரத்து, 563 ஆக உயர்ந்தது. அதையடுத்து, மேலும் ஒரு மாதத்துக்கு, ஊரடங்கை நீட்டிக்க பார்லி.,யின் ஒப்புதலை கேட்டுள்ளார், பிரதமர், பெட்ரோ சாஞ்சஸ்.களையிழந்த ஓட்டல்கள்ரோம் : ஐரோப்பிய நாடான இத்தாலியின் ரோம், மிலன், வெனிஸ் ஆகியவை, சுற்றுலாவுக்கு புகழ் பெற்றவை. வைரசால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இத்தாலிக்கு சுற்றுலா பயணியர் வருகை முழுதும் குறைந்துவிட்டது.

அதனால், அங்குள்ள நட்சத்திர ஓட்டல்கள் களையிழந்து காணப்படுகின்றன.நேபாளத்தில் முதல் பலிகாத்மாண்டு: நம் அண்டை நாடான நேபாளத்தில், கொரோனா வைரஸ் பாதிப்பால், முதல் பலி பதிவாகியுள்ளது. சிகிச்சை பெற்று வந்த, 29 வயது பெண், உயிரிழந்தார். வைரஸ் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 281ஆக உயர்ந்துள்ளது. இதில், 36 பேர் குணமடைந்துள்ளனர். அதிகாரி நீக்கம் வாஷிங்டன் : அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் கண்காணிப்பு பிரிவு தலைவரான, ஸ்டீவ் லினிக்கை, பதவில் இருந்து, அதிபர் டொனால்டு டிரம்ப் நீக்கியுள்ளார். கடந்த, 2013ல், அப்போதைய அதிபர், பராக் ஒபாமாவால் இவர் நியமிக்கப்பட்டார். அரசின் செயல்பாடுகள் தொடர்பாக அவர் விசாரிக்கத் துவங்கியதால், பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

4 ஐ.எஸ்., பயங்கரவாதிகள் கொலைலாகூர்: அண்டை நாடான பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில், பாதுகாப்புப் படையினர் நேற்று நடத்திய துப்பாக்கிச் சூட்டில், நான்கு ஐ.எஸ்., பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்த வெடிப்பொருட்களும், ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்கள், பஹவல்பூர் பகுதியில் உள்ள சிறுபான்மை மத இடங்களில், தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருந்தது தெரிய வந்துள்ளது.விமான விபத்தில் 4 பேர் உயிரிழப்புரியோ டி ஜெனிரோ: தென் அமெரிக்க நாடான பிரேசிலின் சியாரா மாகாணத்தில், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த டாக்டர் ஒருவர், சிகிச்சைக்காக, கடந்த 15ம் தேதி இரவு, விமானத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது, பைலட்டின் கட்டுப்பாட்டை இழந்த அவ்விமானம், தரையில் விழுந்து நொறுங்கியது. இவ்விபத்தில், அதில் இருந்த டாக்டர், இரண்டு மருத்துவ ஊழியர்கள், பைலட் ஆகிய நான்கு பேரும், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

போர்க்கப்பல் ஊழியர்களுக்கு தொற்றுவாஷிங்டன்: அமெரிக்காவின், 'தியோடோர் ரூஸ்வெல்ட்' விமானம் தாங்கி போக்கப்பலின் ஊழியர்கள் ஐந்து பேர், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், புதிதாக எட்டு ஊழியர்களுக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருக்கும், இரண்டு வாரங்களுக்கு முன் செய்யப்பட்ட பரிசோதனையில், தொற்று இல்லை என கண்டிபிடிக்கப்பட்டது. தற்போது இவர்களுக்கு தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதால், இக்கப்பலில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 13 ஆக உயர்ந்துள்ளது.ஊரடங்கை எதிர்த்து போராட்டம்பிராங்க்பர்ட் : வைரஸ் பாதிப்பு தொடர்வதால், பல ஐரோப்பிய நாடுகளில் ஊரடங்கு தொடர்கிறது. இந்த நிலையில், ஊரடங்கை விலக்கக் கோரி, பல நகரங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

வர்சா, லண்டன் உள்ளிட்ட நகரங்களில், போராட்டத்தில் ஈடுபட்டோர் கைது செய்யப்பட்டனர். சீன துாதரக அதிகாரி இஸ்ரேலில் மரணம்ஜெருசலேம்: மேற்காசிய நாடான இஸ்ரேலின் சீன துாதரக அதிகாரியாக பணியாற்றி வந்தவர், டு வெய், 58. இவர், டெல் அவிவ் நகரில் உள்ள தன் வீட்டில், நேற்று மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இவரது இறப்புக்கான காரணம் தெரியவில்லை. இவரது குடும்பத்தினர், சீனாவில் வசிக்கின்றனர். சீனாவுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே நல்ல உறவு உள்ளது. 'கொரோனா வைரஸ் பற்றிய முக்கிய விபரங்களை சீனா மறைத்து விட்டது' என, அமெரிக்க வெளியுறவு அமைச்சர், மைக் பாம்பியோ, சமீபத்தில் தெரிவித்திருந்தார். இதற்கு, டு வெய், கடும் கண்டனம் தெரிவித்திருந்தது, சர்ச்சையை ஏற்படுத்தியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X