பொது செய்தி

தமிழ்நாடு

ஆசிரியர்கள் உதவிக்கரம்

Added : மே 17, 2020
Share
Advertisement
  ஆசிரியர்கள் உதவிக்கரம்

ஆனைமலை அடுத்த பெத்தநாயக்கனுார் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களின் குடும்பங்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கி உதவினர். பெத்தநாயக்கனுார் அரசு உயர்நிலைப்பள்ளியில், 142 மாணவர்கள் படிக்கின்றனர். ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட, மாணவர்களின் குடும்பங்களுக்கு பள்ளி ஆசிரியர்கள் உதவ திட்டமிட்டனர்.ஆசிரியர்கள் சார்பில், ரவை, கோதுமை உள்பட பல்வேறு சமையல் பொருட்கள் அடங்கிய தொகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும், கொரோனா பரவலை தடுக்க மேற்கொள்ள வேண்டிய அறிவுரைகள் வழங்கினர்.'அட்மா' திட்ட தலைவர் துரைசாமி, மாவட்ட கல்வி அலுவலர் சுப்ரமணியன் தலைமையில் பொருட்கள் வழங்கப்பட்டன. பள்ளி தலைமை ஆசிரியர் உமாமகேஸ்வரி, தமிழாசிரியர் பாலமுருகன் முன்னிலை வகித்தனர்.நிவாரணம் எதிர்பார்ப்புவால்பாறை சி.ஐ.டி.யு., தொழிற்சங்க பொறுப்பாளர் பரமசிவம், ஆட்டோ ஓட்டுனர் சங்க தலைவர் சார்லஸ் ஆகியோர், கலெக்டருக்கு மனு அனுப்பியுள்ளனர்.மனுவில், 'ஊரடங்கு நீட்டிப்பால், வால்பாறை மலைப்பகுதியில் ஆட்டோக்கள் இயங்கவில்லை. ஊரடங்கால் தற்போது, தொழிலாளர்கள் வறுமையில் வாடுகின்றனர். தமிழக அரசு அறிவித்துள்ள அமைப்பு சாரா நலவாரியத்தில் போதிய விழிப்புணர்வு இல்லாததால் உறுப்பினராக சேரவில்லை.இதனால், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு அரசு வழங்கும் உதவிகளையும் பெற முடியாமல் தவிக்கின்றனர். எனவே, ஆட்டோ ஓட்டுனர்களுக்கு அரசு சார்பில் நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.சிறப்பு ஊதியம் அவசியம்தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்க மாநில தலைவர் ராஜேந்திரன் அறிக்கை:கொரோனா பரவலை தொடர்ந்து, ஊரடங்கு காலத்தில் பணியாற்றும் ரேஷன்கடை ஊழியர்களுக்கு, கடந்த மாதம் முதல் வரும், 17ம் தேதி வரை செலவினத்தொகையாக நாளொன்றுக்கு தலா, 200 வீதம் வழங்கப்படும் என அறிவித்த அரசு, நேற்று முழு தொகையையும் வழங்கியது.அதேபோல், கடந்த மாதத்தில் சிறப்பு ஊதியமாக, தலா, 2,500 வழங்கப்பட்டது. இம்மாதத்துக்கான சிறப்பு ஊதியம் வழங்கவில்லை. மாறாக, செலவினத்தொகை மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. சிறப்பு ஊதியத்தை பணியாளர்களுக்கு வழங்க வேண்டும்.நீலகிரி மாவட்ட ரேஷன்கடை பணியாளர்களுக்கு, கடந்த ஏழு மாதங்களாக வழங்கப்படாத, 114 சதவீத அகவிலைப்படியை உடனடியாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.பழங்குடியினருக்கு நிவாரணம்வால்பாறையில், காடம்பாறை, கருமுட்டி, வெள்ளிமுடி, பரமன்கடவு, சங்கரன்குடி,வில்லோனி நெடுங்குன்று, பாலகணாறு உள்ளிட்ட, 13 செட்டில்மென்ட்களில் பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர்.ஊரடங்கு நடவடிக்கையால், விவசாயம் செய்த பொருட்களை சந்தை படுத்த முடியாமலும், வெளியிடங்களுக்கு வேலைக்கு செல்ல முடியாமலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், பழங்குடியின மக்களுக்கு, சி.எஸ்.ஐ., திருச்சபை சார்பில், 100 பழங்குடியின மக்களின் குடும்பத்துக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.நிகழ்ச்சியில், கூமாட்டி, பாலகணாறு செட்டில்மென்ட் பழங்குடியின மக்களுக்கு, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடிகள் துறை இயக்குனர் ஜான்பிரபு, வால்பாறை சி.எஸ்.ஐ., சர்ச் மறைமாவட்ட தலைவர் ஆயர் ஜெயராஜ் மற்றும் வனத்துறையினர் பொருட்களை வழங்கினர்.வாரச்சந்தை திறக்க கோரிக்கைபொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட ஊராட்சிகளில், அத்தியாவசிய பொருள்களை, வார நாட்களில் கூடும் கிராம சந்தைகளில் குறைந்த விலைக்கு விற்கப்பட்டன.வடக்கிபாளையம், நெகமம் பகுதிகளில், 100 ஆண்டுகளுக்கு மேலாகவும், கிணத்துக்கடவு கிழக்குப்பகுதியில் ஜக்கார்பாளையம், காட்டம்பட்டி மற்றும் வடசித்துார் பகுதிகளிலும் சந்தைகள் கூடுகின்றன. இந்நிலையில், கடந்த மார்ச், 24ம் தேதி முதல் கொரோனா பரவலை தடுக்க, ஊரடங்கு உத்தரவால் சந்தைகள் முடங்கின.தற்போது, ஊரடங்கு தளர்த்தப்பட்டு, மக்கள் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில், இரண்டு மாதங்களுக்கு மேலாக செயல்படாமல் முடங்கியுள்ள வாரச்சந்தைகளை திறந்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும், என, மாவட்ட நிர்வாகத்துக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தலைமையாசிரியர் உதவிவால்பாறை அடுத்துள்ள குரங்குமுடி எஸ்டேட், அரசு துவக்கப்பள்ளியில், 12 மாணவர்கள் படிக்கின்றனர். ஊரடங்கால் பள்ளி மாணவர்களின் பெற்றோர், வேலையிழந்து வறுமையில் வாடுவதை அறிந்த, பள்ளி தலைமையாசிரியர் சிங்காரம், மாணவர்களின் குடும்பத்துக்கு, நிவாரண பொருட்களை வழங்கினார். மாணவர்களின் குடும்பத்துக்கு, 600 ரூபாய் மதிப்பிலான அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X