சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

ஏழைகளுக்கு காய்கறிகள் கொடுத்தேன்!

Added : மே 17, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
 ஏழைகளுக்கு காய்கறிகள் கொடுத்தேன்!

ஏழைகளுக்கு உணவு மற்றும் காய்கறிகள் வழங்கியது பற்றி, வேட்டைக்காரன், சிங்கம் புலி உள்ளிட்ட சில படங்களில், கேரக்டர் ரோல்களில் நடித்து இருக்கும் நடிகர் விக்ரம் ஜெகதீஷ்: கொரோனாவால் வேலைக்குப் போக முடியாமல் நிறைய மக்கள் சிரமப்படுகின்றனர். வறுமையைக் கடந்து வந்த அனுபவம் எனக்கு இருப்பதால், மக்களுக்கு ஏதாவது ஒரு விதத்தில் உதவ நினைத்தேன். சென்னை, கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்த நண்பர் செல்வராகவன் உதவ முன்வந்தார். தினமும் மார்க்கெட்டுக்குப் போய், டெம்போவில், 4,000 கிலோ காய்கறி மூட்டைகளை ஏற்றுவேன்.

தினமும் ஒவ்வொரு ஏரியாவுக்குப் போவேன். அங்குள்ள நண்பரிடம், முன்கூட்டியே பேசி வைத்து விடுவேன். அதன்படி அந்த நண்பரின் வீட்டுக்குக் காய்கறிகளைக் கொண்டு போவேன். மூட்டைகளைப் பிரித்து, எல்லாக் காய்கறிகளிலும் கொஞ்சம் வீதம், தனித்தனி கவர்களில், 'பேக்' பண்ணுவோம்.தகவல் தெரிவிச்சதும், ஏழை மக்கள் அங்கு வந்து, குடும்பத்துக்கு ஒரு பை வீதம் வாங்கிட்டுப் போவாங்க. தவிர, ஏழை மக்கள் குடியிருப்புகளுக்கு போயும், காய்கறிகளைக் கொடுக்கிறேன். டெம்போ வாடகை மற்றும் டிரைவர் செலவுகளை மட்டும், நானும், என் நண்பர்களும் பகிர்ந்து கொள்கிறோம். காய்கறிகளுக்கு, நண்பர் செல்வராகவன் பணம் கேட்பதில்லை. ஆரம்பத்தில், அவருக்கு நான் கொஞ்சம் உதவியிருக்கேன்.

அதற்கு கைமாறாகவும், எதிர்காலத்தில் நான் நல்ல நிலைக்கு வருவேன் என்ற நம்பிக்கையிலும் உதவுகிறார்.தினமும், 15 வகையான காய்கறிகளை மக்களுக்கு வழங்கினோம். சில வாரங்களிலேயே, அதற்காக, ஏழு லட்சம் ரூபாய் செலவானது. கொரோனா முடியும் வரை மக்களுக்குக் காய்கறிகள் கொடுப்போம். உதவ முன்வரும் நண்பர்களிடமும், காய்கறிகள் கொடுத்து, மக்களுக்குக் கொடுக்கச் சொல்கிறேன். சில நண்பர்கள், ஏழை மக்களுக்கு உணவு தானம் செய்கின்றனர். அதில் சில பொட்டலங்களை என்னிடம் கொடுத்து, சில ஏரியாவிலுள்ள மக்களுக்குக் கொடுக்கச் சொல்கின்றனர்.

சென்னை, புரசைவாக்கத்தில், சில தினங்களுக்கு முன், சாலையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு, சிக்கன் பிரியாணி கொடுத்தேன். வறுமையில் உள்ள, பலதரப்பட்ட மக்களைத் தினமும் சந்திக்கிறேன். ஏழை மக்களுக்கோ அல்லது சிரமத்திலுள்ள சினிமா கலைஞர்களுக்கோ, சினிமா பிரபலங்கள் உதவ முன் வந்தால் பலரும் பயனடைவர்!

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
baala - coimbatore,இந்தியா
18-மே-202010:54:16 IST Report Abuse
baala சிலர் தான் கொடுப்பதில்லை. மற்றவர்கள் கொடுப்பதை மட்டுமே குறை கூறி இங்கு கருத்து எழுதுவது ஏன்? இவர்கள் கொடுத்துவிட்டு அதை விமரிசித்தால் நல்லது
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
18-மே-202004:54:49 IST Report Abuse
J.V. Iyer திமுகவைப்போல தன் கட்சிக்காரர்களுக்கு மட்டும் பிரியாணி பொட்டலம் கொடுக்காமல், பசியால் வாடும் எல்லா ஏழைகளுக்கும் உதவும் நல்ல மனம் வாழ்க. பாராட்டுக்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X