பொது செய்தி

தமிழ்நாடு

நலத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்கும் மக்கள்: அரசின் விதிமுறையை பின்பற்ற அறிவுறுத்தல்

Added : மே 17, 2020
Share
Advertisement

உடுமலை:'கொரோனா' தடுப்பு நடவடிக்கையாக, ஊரடங்கு நடைமுறையில் இருப்பினும், சில தளர்வுகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. உள்ளாட்சி நிர்வாகங்களும் நுாறு சதவீத பணியாளர்களுடன் செயல்பட துவங்கியுள்ளன. உடுமலை மற்றும் குடிமங்கலம் ஒன்றியங்களில் ஊரடங்கு காரணமாக, பொதுமக்கள் அரசு அலுவலகங்களுக்கு செல்வது குறைக்கப்பட்டது.இதனால், நலத்திட்டங்களில் பயன்பெறுவது தொடர்பான பணிகளை மேற்கொள்வதில் தடை ஏற்பட்டது. தற்போது ஒன்றிய அலுவலகங்களில், அனைத்து பிரிவு அலுவலர்களும் வருவதால், திட்டங்கள் தொடர்பான பணிகளும் துவங்கியுள்ளன. திருமண உதவித்தொகை திட்டங்களில், விண்ணப்பித்து விட்டு, அதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்க முடியாமலும், நலத்துறையில் விண்ணப்பித்து, அடுத்தகட்ட செயல்பாடுகளை தொடரமுடியாமலும், பொதுமக்கள் காத்திருந்தனர்.இந்நிலையில், ஒன்றிய அலுவலகங்கள் வழக்கமாக செயல்படுவதால், இவ்வாறு நலத்திட்டங்களில் பயன்பெற விண்ணப்பித்துள்ளவர்கள், விண்ணப்பிக்க வேண்டியவர்கள், விபரங்களை சமர்ப்பிக்க உள்ளவர்கள் உட்பட அனைத்து பயனாளிகளும், அரசின் விதிமுறையை பின்பற்றி,அலுவலகங்களுக்கு வரலாம் என அலுவலர்கள் அறிவித்துள்ளனர்.குறிப்பிட்ட தேவை இருக்கும் பட்சத்தில் மட்டுமே அலுவலகத்துக்கு வர வேண்டும். கூடுதல் நபர்களை உடன் அழைத்து வருவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும், சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றவும், அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X