பொது செய்தி

இந்தியா

கொரோனா வைரஸ் எதிர்த்து போரிடலாம்! இவர் இப்படி...

Added : மே 17, 2020
Share
Advertisement

'கொரோனா வைரஸ், தீவிரமான நோய் அல்ல' என, 'எய்ம்ஸ்' இயக்குனர் டாக்டர் ரந்தீப் குலேரியா கூறுகிறார்.டில்லியில் உள்ள, 'எய்ம்ஸ்' எனப்படும், அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவன இயக்குனர், டாக்டர் ரந்தீப் குலேரியா, மருத்துவத்துறையில் ஒரு மேதை. கொரோனா வைரசை கையாள்வதில், அவரது பங்கு மிக முக்கியமானது. அவரது பார்வையில், இந்த வைரஸ் சாதாரணமானதாக இருக்கிறது; இது தீவிரமான நோய் அல்ல, என்கிறார் அவர். அவரது கருத்தின்படி, வைரசால் பாதிக்கப்பட்டவர்களில், 90 முதல், 95 சதவீதம் மக்கள் மீண்டு வருகின்றனர்;

80 சதவீதம் பேருக்கு, லேசான பாதிப்பு ஏற்படுகிறது; 5 சதவீதத்திற்கும் குறைவானவர்களுக்கே, 'வென்டிலேட்டர்' அவசியமாகிறது. ''வைரஸ் பாதிப்பிற்குள்ளான, 80 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள், முதன்மை சிகிச்சையில் குணமடைகிறார்கள். ஆக்சிஜன் சிகிச்சை, 15 சதவீதம் பேருக்கு துணை புரியும் நிலையில், மீதமுள்ளவர்களுக்கு மட்டுமே 'பிளாஸ்மா தெரபி' உள்ளிட்ட, அடுத்த கட்ட சிகிச்சை தேவைப்படுகிறது,'' என்கிறார். முதுகலை மருத்துவம் பயின்ற இவர், நுரையீரல் மருத்துவம் மற்றும் துாக்கமின்மை பிரிவுகளில் 'டாக்டரேட்' முடித்தார். உலக சுகாதார நிறுவன ஆலோசனை குழு உறுப்பினராக இருந்தார்.'எய்ம்ஸ்'சில், நுரையீரல் மற்றும் துாக்கமின்மை துறை பேராசிரியராக இருந்து தலைவராகவும் உயர்ந்தார். மறைந்த முன்னாள் பிரதமர், வாஜ்பாயின் தனிப்பட்ட மருத்துவராக, 1998 முதல் இருந்தார்.

நுரையீரல் நோய் பற்றிய இவரது ஆய்வின் முடிவுகள், 36 புத்தகங்கள் மற்றும் 268 கட்டுரைகளாக வெளிவந்துள்ளன. இவற்றில், 117 கட்டுரைகளை, 'ரிசர்ச் கேட்' என்ற, 'ஆன் லைன்' தகவல் களஞ்சியம் வெளியிட்டுள்ளது.இந்திய மருத்துவ கவுன்சில் சார்பில், மருத்துவ சேவைக்கான புகழ் பெற்ற டாக்டர் பி.சி.ராய் விருது, 2014ம் ஆண்டில் டாக்டர் ரந்தீபுக்கு வழங்கப்பட்டதுடன், 2015ல், பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X