டில்லி உஷ்

Added : மே 17, 2020
Share
Advertisement

இ.பி.எஸ்.,சை பாராட்டிய மோடிகொரோனாவால் இந்தியா மட்டுமன்றி, பல உலக நாடுகள், மிகப் பெரிய பொருளாதார சரிவைச் சந்தித்துள்ளன. நம் நாட்டில், இந்தப் பிரச்னையில் இருந்து வெளிவர, பிரதமர் மோடி, 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருளாதார திட்டங்களை அறிவித்தார். இதைத் தொடர்ந்து, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், என்ன திட்டங்கள், அதற்கு எவ்வளவு பணம் என்பதை, விரிவாக அறிவித்தார்.

இந்நிலையில், தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள இழப்பை சரி செய்ய, முதல்வர், இ.பி.எஸ். மத்திய அரசிடம் நிதி கோரியுள்ளார். இதோடு நிற்காமல், பொருளாதாரப் பிரச்னையிலிருந்து மீள என்ன வழி என்ன என்பதை ஆராய, உயர் மட்டக் குழு ஒன்றையும் அமைத்துள்ளார். ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர், சி.ரங்கராஜன் தலைமையிலான இந்தக் குழு, மூன்று மாதங்களுக்குள், தன் பரிந்துரைகளை சமர்ப்பிக்கும்.இந்த விஷயம், பிரதமர் மோடிக்கு தெரிந்ததும், இ.பி.எஸ்.,சுக்கு போன் போட்டு, அவரை பாராட்டினாராம். 'ரங்கராஜன் விஷயம் தெரிந்தவர்; மிகவும் திறமையானவர்; சரியான நபரைத்தான் தேர்வு செய்துள்ளீர்கள்.

அவர், தமிழகத்திற்கு நல்ல வழி காட்டுவார். இது தொடர்பாக எந்த உதவி வேண்டுமானலும் தயங்காமல் கேளுங்கள்' என போனில் சொன்னாராம் மோடி.மம்தாவின் கோபம்கொரோனா பரவலை கட்டுப்படுத்த கொண்டுவரப்பட்ட ஊரடங்தை தளர்த்துவது குறித்து, பிரதமர் மோடி, சமீபத்தில் அனைத்து மாநில முதல்வர்களுடன், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக ஆலோசனை நடத்தினார். ஒவ்வொரு முதல்வரும், தங்களுடைய மாநில பிரச்னைகளை மோடியிடம் எடுத்துக் கூறினர்.மேற்கு வங்க முதல்வர், மம்தா பேசும் போது, 'கொரோனா விவகாரத்தில், மத்திய அரசு அரசியல் செய்கிறது; என் மாநிலத்தில், மத்திய அதிகாரிகள் குழுவை அனுப்பி, பிரச்னையை ஏற்படுத்த நினைக்கிறீர்கள். என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?' என, சத்தம் போட்டு பேசினாராம்.

'இது முதல்வர்கள் கூட்டமா அல்லது கோல்கட்டாவில் நடக்கும் அரசியல் கூட்டமா' என, பிரதமருடன் அமர்ந்திருந்த சில அமைச்சர்கள் ஆதங்கப்பட்டனர்.ஆனால், பிரதமரோ, மம்தாவின் பேச்சை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தார். உடனே பீஹார் முதல்வர் நிதிஷ் குமார், 'ஒவ்வொரு முதல்வரும் நீண்ட நேரம் பேசினால், இந்த கூட்டம் முடிய, இரவு, 11:00 மணி ஆகிவிடும்; எனவே, யாரும் ஆறு நிமிடங்களுக்கு மேல் பேசக் கூடாது' என, சொன்னாராம். மோடியும், 'இது சரியான யோசனை' என்றாராம். இதற்குப் பின்தான் பேச்சை முடித்திருக்கிறார், மம்தா.தமிழக முதல்வர் இ.பி.எஸ்., தன் பக்கத்தில் அமர்ந்திருந்த அதிகாரிகளிடம், 'எதுக்கு அந்த அம்மா இப்படி கத்தறாங்க?' என கேட்டாராம்.

இந்தக் கூட்டத்தில், ஹிந்தி தெரிந்த சில அதிகாரிகள், முதல்வர் இ.பி.எஸ்.,சுடன் இருந்தனர். அவர்கள், மொழி பெயர்த்து, முதல்வருக்கு விளக்கினார்களாம். பிரியங்காவிற்கு உதவிய ஊரடங்கு நாடு முழுதும் ஊரடங்கு அமலில் இருப்பதால், சாலைகளில் நடமாட்டம் இல்லை. அனைவரும் வீட்டிற்குள்ளாகவே அடைந்து கிடக்கின்றனர்.சோனியாவின் குடும்பத்திற்கு, இந்த ஊரடங்கு பெரிதாக உதவியுள்ளதாம். குறிப்பாக பிரியங்காவின் மகன், மகள் இதனால் பயனடைந்துள்ளனர். தங்கள் குழந்தைகளுக்கு, கார் ஓட்ட கற்றுக் கொடுக்க வேண்டும் என, பிரியங்காவிற்கு நெடுநாள் ஆசை. அதை இப்போது நிறைவேற்றி விட்டாராம்.பிரியங்காவின் வீடு, டில்லியின் மைய பகுதியில், வி.ஐ.பி.,க்கள் வசிக்கும் பகுதியில் உள்ளது. அங்கு சாலைகள் மிகவும் விசாலமானவை. எப்போதும் வி.ஐ.பி.,க்களின் கார்கள் விரைந்து கொண்டிருக்கும். ஆனால், ஊரடங்கின் போது, போக்குவரத்தே இல்லை. இந்த தெருக்களில், தன் காரை எடுத்துக் கொண்டு மகன், மகளுக்கு பயிற்சி அளித்துள்ளார், பிரியங்காவின் கணவர், ராபர்ட் வாத்ரா. காரின் முன் சீட்டில் இவர் அமர்ந்து கொள்ள, பின்னால் பிரியங்கா; டிரைவர் சீட்டில், மகன். அவரின் பயிற்சி முடிந்ததும், பிறகு மகளுக்கு பயிற்சி. இப்படி, தினமும், இரண்டு மணி நேரம், டில்லியின் வி.ஐ.பி.,க்கள் சாலைகளில், கார் ஓட்ட பயிற்சி நடந்துள்ளதாம். முன்னாள் பிரதமர் குடும்பம் என்பதால், பாதுகாப்பிற்காக, இந்த பயிற்சி காருக்கு, முன்னும் பின்னும், தனி கார்களில் போலீசார் சென்றுள்ளனர்.ஆனால், ராகுலுக்கு ஊரடங்கால் வருத்தம். அடிக்கடி இவர் இத்தாலி சென்று, அங்குள்ள தன் தாய் சோனியா வழி பாட்டியை சந்தித்து வருவார். பாட்டியின் மீது அதிக பாசம். இப்போது பாட்டியை சந்திக்க முடியவில்லை என வருத்தம். இதனால், தினமும் போனில், வீடியோ மூலமாக பாட்டியுடன் பேசி, தன் ஆசையை நிறைவேற்றி வருகிறார். ஒன்று சேர்க்கும் யெச்சூரிஇடது சாரி கட்சியின் தலைவர் சீதாராம் யெச்சூரி. மோடியை கடுமையாக விமர்சித்து வருபவர்.இந்த ஊரடங்கின் போது, மூன்று முறை காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்தித்துள்ளார் இவர். 'எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றாக சேர்ந்து, மோடிக்கு எதிரான பிரசாரத்தை மீண்டும் துவங்க வேண்டும். நாம் அமைதியாக இருந்தால், மோடிக்கு சாதகமாகிவிடும்' என, சோனியாவிடம் பேசியுள்ளாராம்.கொரோனா விவகாரத்தில் மத்திய அரசு செய்த தவறுகள், பிரதமர் புதிதாக அறிவித்துள்ள நிவாரண நிதியில் உள்ள ஓட்டைகள் என, பல விஷயங்களை சோனியாவிடம் விளக்கினாராம் யெச்சூரி. 'ஊரங்கால் எதிர்க்கட்சிகள் முடங்கிக் கிடக்கக் கூடாது; ஒன்று சேர வேண்டும்' என, சோனியாவிடம் வற்புறுத்தியுள்ளார்.மத்திய அரசுக்கு எதிராக அடிக்கடி ஏதாவது போரட்டம், எதிர்ப்பு என, டில்லியில் உள்ள இடது சாரி அலுவலகத்தின் முன் நடத்தி வருகிறார், யெச்சூரி. இப்போது, இவர் தான், அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் சக்தியாக உருவெடுத்து வருகிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X