சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பாதிப்பு, 11 ஆயிரத்தை தாண்டியது ; குணமடைந்தோர், 4,172 பேர்; பலி, 78 பேர்

Added : மே 17, 2020
Share
Advertisement

சென்னை : கொரோனா பாதிப்பு, 11 ஆயிரத்து, 224 ஆக உயர்ந்துள்ளது. அதில், 4,172 பேர் குணமடைந்து, வீடு திரும்பியுள்ளனர்; 78 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து, சுகாதாரத் துறை வெளியிட்ட செய்தி குறிப்பு:கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 6,971 பேர், மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். பாதிப்பு அறிகுறியுடன், 4,366 பேர் தனியாக உள்ளனர். நேற்று மட்டும், 13 ஆயிரத்து, 81 பரிசோதனைகள் செய்யப்பட்டன. அதில், 639 பேருக்கு, தொற்று கண்டறியப்பட்டது. இவர்களில், தமிழகத்தை சேர்ந்தவர்கள், 558 பேர்; மஹாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து வந்த, 73 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல், கர்நாடகாவில் இருந்து வந்த - இரண்டு பேர்; ராஜஸ்தான் - இரண்டு பேர், தெலுங்கானா - மூன்று பேர்; ஆந்திரா - ஒருவர் என, பாதிக்கப்பட்டுள்ளனர்.சென்னையில் மட்டும் நேற்று, 482 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில்,28 பேர்; திருவள்ளூர் மாவட்டத்தில், 18 பேர்; மதுரை, 13 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.மாநிலம் முழுதும், இதுவரை, 3.27 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 11 ஆயிரத்து, 224 பேருக்கு, கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தீவிரமாக உள்ள சென்னையில் மட்டும், 6,750 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில், 12 வயதுக்கு உட்பட்ட சிறார்கள், 663 பேர் உள்ளனர். 60 வயதுக்கு மேற்பட்டோர், 812 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரத்தில், நேற்று ஒரே நாளில், 634 பேர் குணமடைந்து, வீடு திரும்பியுள்ளனர். இவர்களையும் சேர்த்து, 4,172 பேர் குணம் அடைந்துள்ளனர்.சென்னை, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த, 63 வயது நபர், நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதே மருத்துவமனையில், திருவள்ளூரை சேர்ந்த, 40 வயது நபர், நேற்று உயிரிழந்தார்.ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், 44 மற்றும், 45 வயது பெண்கள், நேற்று முன்தினம் உயிரிழந்தனர். இதுவரை கொரோனாவால், 78 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

வெளிமாநில பாதிப்பு எவ்வளவு? ஊரடங்கு நீட்டிப்பு காரணமாக, வெளி மாநிலத்தில் தவித்த தமிழர்களை, ரயில் வாயிலாக, அரசு அழைத்து வருகிறது.இதுவரை, 1,696 பேர் அழைத்து வரப்பட்டு, 14 நாட்கள் கண்காணிப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுஉள்ளனர். அவர்கள் அனைவருக்கும், கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. அதில், மஹாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து வந்தவர்களில், 194 பேருக்கு, கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. அதேபோல், குஜராத் - ஒன்பது பேர்; கர்நாடகா, தெலுங்கானா, தலா, மூன்று பேர்; ராஜஸ்தான் - இரண்டு பேர்; ஆந்திரா - ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்டங்களில் பாதிப்பு நிலவரம்மாவட்டம் / நேற்று முன்தினம் / நேற்று /குணம் அடைந்தோர் / இறப்புஅரியலுார் 348 353 328 0செங்கல்பட்டு 470 498 187 4சென்னை 6,268 6,750 1,476 53கோவை 146 146 144 1கடலுார் 416 417 259 1தர்மபுரி 5 5 2 0திண்டுக்கல் 121 121 97 1ஈரோடு 70 70 69 1கள்ளக்குறிச்சி 78 95 39 0காஞ்சிபுரம் 181 186 107 1கன்னியாகுமரி 37 37 16 1கரூர் 56 72 45 0கிருஷ்ணகிரி 20 20 0 0மதுரை 147 160 107 2நாகை 49 50 45 0நாமக்கல் 77 77 77 0நீலகிரி 14 14 11 0பெரம்பலுார் 139 139 33 0புதுக்கோட்டை 7 7 2 0ராமநாதபுரம் 31 31 21 1ராணிப்பேட்டை 81 81 46 0சேலம் 35 35 35 0சிவகங்கை 22 26 12 0தென்காசி 61 64 40 0தஞ்சாவூர் 72 72 62 0தேனி 79 79 43 1திருப்பத்துார் 28 28 20 0திருவள்ளூர் 528 546 178 5திருவண்ணாமலை 148 151 41 0திருவாரூர் 32 32 29 0துாத்துக்குடி 57 70 28 2திருநெல்வேலி 179 194 64 1திருப்பூர் 114 114 114 0திருச்சி 67 67 62 0வேலுார் 34 34 22 1விழுப்புரம் 308 308 276 2விருதுநகர் 47 51 35 0வெளிநாட்டில் இருந்து வந்தோர் 13 13 0 0ரயிலில் இருந்து வந்தோர் 0 2 0 0மொத்தம் 10,585 11,224 4,172 78

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X