செலவீனத்தை ஏற்க முடியாது

Added : மே 17, 2020
Share
Advertisement
  செலவீனத்தை ஏற்க முடியாது

மத்திய பட்ஜெட்டில் அறிவித்த, 30 லட்சம் கோடி ரூபாய் செலவீனத்துக்கு மேல் வாங்கும் கூடுதல் கடனும், அதன் மூலமான செலவீனமும் தான், உண்மையான ஊக்கச் சலுகை திட்டமாக இருக்கும். அதனால், ஏழைகள் நல திட்டம் மற்றும் ஐந்து கட்ட ஊக்க சலுகைக்கு அறிவித்த தொகையை, கூடுதல் செலவீனமாக ஏற்க முடியாது. கூடுதல் கடன் வாங்கும் போது தான், உண்மை நிலவரம் தெரிய வரும், எனினும், கூடுதல் செலவுகளை சமாளிக்க, கூடுதல் கடன் வாங்க வேண்டும் என்பதை ஏற்றுக் கொண்ட நிதியமைச்சருக்கு, நன்றி தெரிவிக்கிறேன்.

- சிதம்பரம் , மூத்த தலைவர், காங்.,

நடந்து செல்ல வேண்டாம்

டில்லியில் உள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் நலனுக்காக, பல நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு உள்ளன. அவர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்ப, சிறப்பு ரயில்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதனால், வீடுகளுக்கு, தொழிலாளர்கள் யாரும் நடந்து செல்ல வேண்டாம். ரயில்களில் பயணிக்கும் வரை, புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், முகாம்களில் தங்கியிருக்க வேண்டும். அவர்களுக்கு உணவு, குடிநீர் ஆகியவை வழங்க, ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

- அரவிந்த் கெஜ்ரிவால் , டில்லி முதல்வர், ஆம் ஆத்மி

அரசியல் செய்கிறார்

புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காக இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் விவகாரத்தில், ரயில்வே அமைச்சர், பியுஷ் கோயல் அரசியல் செய்கிறார். சிறப்பு ரயில்கள் இயக்க அனுமதி கோரி வந்த மனுக்கள் அனைத்துக்கும், அனுமதியளித்து விட்டோம். புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் நலனில், மாநில அரசுகளுக்கும் அக்கறை உள்ளது. கொரோனாவுக்கு எதிராக, மாநில அரசுகளுடன் இணைந்து, மத்திய அரசு போராட வேண்டும்.

- பூபேஷ் பாகல் , சத்தீஸ்கர் முதல்வர், காங்.,

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X