பொது செய்தி

தமிழ்நாடு

கோவை - ரவுண்ட் அப்: இரு வாரமாக தொற்று இல்லை: கோவை, திருப்பூரில் நிம்மதி

Updated : மே 18, 2020 | Added : மே 18, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

கோவை, திருப்பூரில் இரண்டு வாரங்களாக புதிதாக கொரோனா தொற்றுடன் யாரும் அனுமதிக்கப்படவில்லை.கோவை, திருப்பூர் மாவட்டத்தில், கொரோனா பாதிக்கப்பட்ட அனைவரும் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர்.



latest tamil news



கேரளாவில் இருந்து ரயிலில் கோவை வந்த 75 பேரை, சுகாதார துறையினர் பிரத்யேக கண்காணிப்பு மையத்தில் தங்க வைத்துள்ளனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது, தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டால் மட்டுமே, வீடுகளுக்கு அனுப்பப்படுவர் என சுகாதார துறையினர் தெரிவித்தனர்.


latest tamil news




மேலும், இரண்டாம் கட்டமாக, இந்திய மருத்துவ கவுன்சில் சார்பில் கோவை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில், சமூக பரவல் குறித்த பொதுமக்களிடம் பரிசோதனை செய்யப்பட்டது.

திருப்பூர் அரசு மருத்துவமனையில், ஐந்து பேர் கொரோனா வார்டில் கண்காணிப்பில் உள்ளனர். வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து வந்துள்ள, 1,666 பேர், வீட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
18-மே-202009:27:17 IST Report Abuse
Loganathan Kuttuva வெளிமாநில தொழிலாளர்கள் பலர் வெளியேறியுள்ளனர்.பொது மக்கள் ஒத்துழைப்பு ஒரு முக்கிய காரணம் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X