300 நர்சுகள் வேலையை விட்டு ஓட்டம்: மேற்கு வங்க அரசுக்கு திடீர் நெருக்கடி

Updated : மே 19, 2020 | Added : மே 18, 2020 | கருத்துகள் (25)
Share
Advertisement
300 நர்சுகள் வேலையை விட்டு ஓட்டம்: மேற்கு வங்க அரசுக்கு திடீர் நெருக்கடி

கோல்கட்டா : மேற்கு வங்க மருத்துவமனைகளில் பணியாற்றி வந்த, 300க்கும் மேற்பட்ட நர்சுகள், போதிய பாதுகாப்பு இல்லையென கூறி, வேலையை ராஜினாமா செய்து விட்டு, தங்கள் சொந்த மாநிலங்களுக்கு ஓட்டம் பிடித்துள்ளனர்.

இதனால், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க, மருத்துவமனைகளில் நர்சுகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. கொரோனா பரவல் காரணமாக, மருத்துவமனைகளில் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கோல்கட்டாவில் உள்ள பிரபலமான தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றி வந்த, 300க்கும் அதிகமான நர்சுகள், தங்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை என கூறி, வேலையை ராஜினாமா செய்துள்ளனர்.

இவர்களில் பெரும்பாலானோர், வட கிழக்கு மாநிலமான மணிப்பூரைச் சேர்ந்தவர்கள். 'எங்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை. உடனடியாக ஊருக்கு வரும்படி, பெற்றோரிடம் இருந்து தொடர்ந்து வற்புறுத்தல் வருகிறது. 'இதனால் தான் வேலையை ராஜினாமா செய்துள்ளோம்' என, நர்சுகள் தெரிவித்துள்ளனர்.இதையடுத்து, மருத்துவமனைகளில் நர்சுகளுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்கும்படி, மேற்கு வங்க மாநில தலைமைச் செயலருக்கு, கோல்கட்டா மருத்துவமனை சங்கம் சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

இதற்கிடையே, மணிப்பூர் மாநில அரசு வலியுறுத்தியதால் தான், நர்சுகள், சொந்த மாநிலத்துக்கு திரும்பி விட்டனர் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. இது குறித்து மணிப்பூர் முதல்வரும், பா.ஜ., வைச் சேர்ந்தவருமான பிரேன் சிங் கூறியதாவது:எங்கள் மாநிலத்தைச் சேர்ந்த நர்சுகளுக்கு எந்த கோரிக்கையும் விடுக்கவில்லை. அவர்களாக சொந்த மாநிலத்துக்கு திரும்பினால், நாங்கள் எப்படி தடுக்க முடியும்?தாங்கள் வேலை பார்க்கும் இடம், தங்களுக்கு வசதியாக இல்லை, பாதுகாப்பு இல்லை என அவர்கள் கருதினால், நாங்கள் என்ன செய்வது? சம்பந்தபட்ட மருத்துவமனை நிர்வாகமும், மாநில அரசும் தான், இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ray - Chennai,இந்தியா
19-மே-202016:23:53 IST Report Abuse
Ray மணிப்பூர் மாநில முதல்வர் அந்த நர்ஸ் டாக்டர் களுக்கு நிவாரணமும் பரிசும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளாரே THEY WILL BE COMPENSATED AND REWARDED மாநில முதல்வர்கள் மீட்டிங்கில் மம்தா முரய்த்துக் கொண்டார் அதன் விளைவு மறுநாள் இந்த அறிவிப்பு - நர்சுகள் ஓட்டம்
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
19-மே-202004:35:18 IST Report Abuse
J.V. Iyer மம்தா தீதி உயிர் காப்பவர்களை எப்படி நடத்துவது என்று தெரியாமல் வங்க மக்களுக்கு துரோகம் செய்கிறார்.
Rate this:
Cancel
Ram - ottawa,கனடா
18-மே-202021:53:36 IST Report Abuse
Ram கெட்டது எது நடந்தாலும் மோடிஜி தான் காரணம், அவர் செய்த நல்லதையெல்லாம் நியூஸ் சானெல்களில் விவாதிகமாட்டோம் , நல்லது எது நடந்தாலும் அதுக்கு சுடலை , பொய்க்கோ , சாமான், பண்ணிராய சோஜயன் , கிச்சடிவாள் மற்றும் டொம்தா தான் காரணம் ..சொல்லிப்புட்டேன் . இப்படியே பண்ணிக்கிட்டிருந்தா தொழில் செய்பவர்கள் யாரும் பணம் போட்டு தொழில் தொடங்கமாட்டார்கள் , அதிகமா புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் என்று பேசிக்கொண்டிருந்தாள் ஆப்புதான் நம்மக்கு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X